சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அரசு முறை பயணமாக மே 7 ஆம் தேதி ரஷ்யா செல்கிறார்
இந்தப் பயணத்தின்போது ரஷ்ய ஜனாதிபதி புதினை சந்தித்து, இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஜி ஜின்பிங் ஈடுபடவுள்ளார். மேலும் இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா(சோவியத் யூனியன்) வெற்றியடைந்த தினந்தை கொண்டாடும் வகையில் மாஸ்கோவில் நடைபெறும் நிகழ்விலும் பங்கேற்கிறார்.
புதின் உடனான பேச்சுவார்த்தையின் போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது, ராஜ்ஜிய ரீதியிலான யுக்தி, சர்வதேச மற்றும் பிராந்திய அளவிலான பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து இருதரப்பு அரசு மற்றும் துறை ரீதியான ஒப்பந்தங்களில் இருவரும் கையெழுத்திடவுள்ளனர்.