2022ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் பாஹ் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வதற்காக 206 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு முறைப்படி அழைப்புகளை அனுப்பியுள்ளார். இது பற்றி பேசுகையில், ஓராண்டுக்குப் பிறகு பெய்ஜிங் புதிய வரலாற்றை உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்த அவர், வரலாற்றில், கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மற்றும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்திய முதல் நகரம் என்ற பெருமையைப் பெய்ஜிங் பெறும் என்றும் புகழாரம் சூட்டினார்.
*****************
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்1 பி’ விசா வழங்கி வருகிறது. இந்த விசாவை உலக நாடுகளில் அதிகவில் இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். ஆண்டுக்கு 85 ஆயிரம் எச்1 பி விசா வழங்கப்படுகிறது. இதற்கு2.25 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பிக்கின்றனர். எனவே, குலுக்கல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு விசா வழங்கப்படுகிறது.
*****************
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் தனது பதவியின் கடைசி காலத்தில்விசா நடைமுறையில் குலுக்கல் முறையை மாற்றி, விண்ணப்பிப்போரின் தகுதிக்கேற்ப மதிப்பெண் அடிப்படையில், விசா வழங்குவதற்கான நிர்வாக உத்தரவை பிறப்பித்தார். இந்நிலையில், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின்நிர்வாகம் ‘எச்1 பி’ விசா மீதான டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கையை தாமதப்படுத்துவதாக அறிவித்துள்ளது. அதாவது எச்1 பி விசா வழங்குவதில் இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை குலுக்கல் முறையே தொடரும் என்று ஜோ பைடன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
*****************
செவ்வாய்க்கிரக ஆய்வுக்காகச் செலுத்தப்பட்டுள்ள சீனாவின் தியான் வென்-1 ஆய்வுக் கலம், திட்டத்தின்படி செவ்வாய் கிரகத்தை சீராக சென்றடையும் வகையில், பிப்ரவரி5ஆம் நாள் இரவில், அதன் நான்காவது சுற்றுப்பாதை திருத்தத்தை விண்கலம் மேற்கொண்டது. இதுவரை, தியான் வென்-1 சுற்றுவட்டப் பாதையில் சுமார் 197 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது, அதற்கும், பூமிக்கும் இடையேயான தூரம் சுமார் 18.4 கோடி கிலோமீட்டராகும். அதற்கும், செவ்வாய்க் கிரகத்துக்கும் இடையேயான தூரம் 11 லட்சம் கிலோமீட்டராகும். இந்த ஆய்வுக் கலத்தின் பல்வேறு முறைமைகள் சீராக இயங்கி வருகின்றன.முன்னதாக, தியான் வென்-1 ஆய்வுக் கலம் செவ்வாய்க் கிரகத்தின் முதலாவது நிழற்படத்தைப் பிடித்து புவிக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
*****************
பல நாடுகளில் கொரோனா வைரஸ் இருந்ததற்கான ஆதாரங்கள் 2019ஆம் ஆண்டுடிசம்பருக்கு முன்பு சேகரிக்கப்பட்ட மனித மற்றும்சுற்றுச்சூழல் மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளன. இது குறித்து, உலக சுகாதார அமைப்பின்அவசர திட்டத்துக்கான தொழில்நுட்ப இயக்குநர் மரியா கூறுகையில், இந்த ஆதாரங்கள் அனைத்தையும் உலக சுகாதார அமைப்பு அதன் சர்வதேசஆய்வக வலையமைப்பு மூலம் தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகிறது. இந்த கண்டுபிடிப்புகள் குறித்துநாங்கள் ஆலோசித்து வருகிறோம் என்றார்.