states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மணிப்பூரில் மீண்டும் வன்முறை; இணைய சேவை துண்டிப்பு!

மணிப்பூர் மாநிலத்தில், ‘மெய்டெய்’ மக்களை பழங்குடி  பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மாதம்  நாகா, குக்கி பழங்குடியினர் நடத்திய போராட்டம், அதற்கு  பதிலடியாக மெய்டெய் மக்கள் நடத்திய பேரணி, நூறுக்கும்  அதிகமான உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. ஆயிரக் கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். பல ஆயிரக்கணக் கான வீடுகள், கடைகள், வாகனங்கள் எரித்து சாம்பலாக்கப் பட்டன. நீண்ட முயற்சிக்குப் பிறகு சற்று அமைதி திரும்பி யிருந்தது. இந்நிலையில், அங்கு மீண்டும் வீடுகள் தீக்கிரை யாக்கப்பட்டு வன்முறை வெடித்துள்ளதால், மே 26 வரை  மொபைல் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. 

கறுப்புப் பணப்பேர்வழிகளுக்கு மோடி சிவப்புக் கம்பள வரவேற்பு...

“சாதாரண மக்களிடம் 2,000 ரூபாய் நோட்டுகள் இல்லை. 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே அவர்கள்  அதை பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டனர். தினசரி சில்லரைப் பரிமாற்றத்திற்கு அவை பயனற்றவை. அப்படி யென்றால், 2,000 ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு பயன்படுத்தியது யார்? பதில் உங்களுக்கு தெரியும். 2,000 ரூபாய் நோட்டு கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் தங்கள் பணத்தை எளிதில் பதுக்கி வைக்கவே இது உதவி யது. 2,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு இப்போது சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது” என்று மோடி அரசை ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.  சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

‘தி கேரள ஸ்டோரி’க்கு மேற்குவங்கத்திலும் தியேட்டர் இல்லை!

இஸ்லாமியர்கள் மீது வெறுப்பையும், வன்முறையை யும் வெளிப்படுத்தும் ‘தி கேரள ஸ்டோரி’ திரைப்படத்திற்கு  எதிர்பார்த்த கூட்டம் வராததால், திரையரங்க உரிமையா ளர்களே படத்தைத் திரையிட மறுத்து விட்டனர். ஆனால்,  மேற்குவங்கத்தில் மாநில அரசே படத்திற்கு தடை விதித்த தால், படம் ஓடவில்லை. ஆனால், உச்ச நீதிமன்றம் மே 18  அன்று அரசின் தடையை நீக்கி இடைக்கால உத்தரவு பிறப் பித்தது. எனினும் புதிய படங்கள் வெளியாக உள்ளதால், ‘தி  கேரளா ஸ்டோரி’ படம் திரையிடுவதற்கு 2 வாரங்களுக்கு போதிய இடமில்லை என திரையரங்க உரிமையாளர்கள் அறி வித்துள்ளனர்.

பூ, சால்வைகள் வேண்டாம்;  புத்தகம் தாருங்கள் :சித்தராமையா

“தனிப்பட்ட மற்றும் பொது நிகழ்ச்சிகளின் போது, மரி யாதை நிமித்தமாக எனக்கு வழங்கும் பூங்கொத்து அல்லது  சால்வைகளை வாங்குவதில்லை என முடிவு செய்துள்ளேன். எனவே, என்மீது அன்பும் மரியாதையும் செலுத்த நினைப்பவர் கள், எனக்குப் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்குங்கள். உங்கள் அன்பும் பாசமும் என் மீது தொடர்ந்து இருக்கட்டும்!”  என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா டுவிட்டரில் வேண்டு கோள் விடுத்துள்ளார். மேலும், தன்னுடைய வாகனம் செல் வதற்காக, போக்குவரத்தை நிறுத்தி, பொதுமக்களைக் கஷ்டப் படுத்தக் கூடாது என்று போலீசாருக்கும் சித்தராமையா உத்தர விட்டுள்ளார்.

கர்நாடக பேரவை வளாகத்தில் மாட்டின் சிறுநீரைத் தெளித்த காங்கிரசார்

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் பொறுப்பேற்று, முதலாவது சட்டப் பேரவைக் கூட்டம் திங்களன்று கூடியது. இதில், தேர்தலில்  வெற்றிபெற்ற 224 எம்எல்ஏ-க்களின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, பாஜக-வின் ஊழல் ஆட்சியால் அசுத்தமான கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தை புனிதப் படுத்துகிறோம் என்று கூறி, காங்கிரஸ் கட்சியினர் பசு மாட்டின் சிறுநீரை, சட்டப்பேரவை வளாகத்தில் தெளித்தனர்.

வரதட்சணை வாங்கினால் பட்டப்படிப்பு சான்றிதழ் ரத்து: கேசிஆர் அதிரடி

தெலுங்கானாவில் வரதட்சணை பிரச்சனையால் திருமணங்கள் ரத்தாவது குறித்து, தெலுங்கானா முதல்வர்  கே. சந்திரசேகர ராவ், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை  நடத்தி வந்தார். அதைத்தொடர்ந்து, மாணவர்கள் கல்லூரி யில் முதலாமாண்டு சேரும்போதே, ‘எனது திருமணத்தின் போது வரதட்சணை வாங்க மாட்டேன். வரதட்சணை என்பது  சட்டப்படி குற்றம். அவ்வாறு நான் வரதட்சணை பெற்றால்  என் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்’ என உறுதிமொழி  பெறுவது என்றும், அதைமீறி எதிர்காலத்தில் வரதட்சணை  பெற்றதாக போலீசிற்கு புகார் வந்தால், சம்பந்தப்பட்டவர் களின் பட்டப்படிப்பு சான்றிதழை ரத்து செய்யவும் முடிவெடுத் துள்ளார்.

மதவன்முறையைத் தூண்டி பாஜக நாட்டைப் பற்றி எரிய வைக்கிறது.. 

“ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது தேசத்தை முதன்மையானதாகவும், கட்சியை இரண்டாவதாகவும் கருதினார். ஆனால், இப்போதைய ஒன்றிய அரசு நாட்டைப்  பற்றிக் கவலைப்படுவதில்லை. தங்கள் கட்சியைப் பற்றி  மட்டுமே கவலைப்படுகிறது. மத வன்முறையைத் தூண்டி விட்டு நாட்டை பற்றி எரிய வைக்கிறது. நாட்டில் பிரச்னைகளை  ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் நடத்துவதும், ஆட்சி யைத் தக்கவைக்க முயற்சிப்பதுமே பாஜக-வின் நோக்கங்க ளாக உள்ளன. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது பஞ்சாப், அசாம், மிசோரமில் அமைதியை நிலைநாட்டினாா். அங்கு காங்கிரசின் ஆட்சி பறிபோகும் என்று அவா் கவலைப் படவில்லை” என காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணி  தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவையில்  புதிய எம்எல்ஏ-க்கள் பதவியேற்பு!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், கடந்த மே 13  அன்று வெளியான பின்னணியில், காங்கிரஸ் 135, பாஜக 66,  மதச்சார்பற்ற ஜனதாதளம் 19, சுயேட்சைகள் 4 என எம்எல்ஏ-க்களைப் பெற்றனர். இந்நிலையில், மொத்தம் தேர்ந்தெ டுக்கப்பட்ட 224 எம்எல்ஏ-க்களும் திங்களன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர். முன்னதாக, தற்காலிக சபா நாயகராக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.வி. தேஷ்பாண்டே  தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆளுநர் தாவர் சந்த்  கெலாட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதைத்தொ டர்ந்து எம்எல்ஏ-க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஜூன் 1 ஆம்தேதி பள்ளிகள் திறப்பு

சென்னை, மே 22- தமிழ்நாட்டில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரு வதால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என்று தகவல் பரவிய நிலையில் திட்டமிட்டப்படி ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறி யுள்ளார்.  ஏற்கனவே திட்டமிட்டப்படி 6-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படு கிறது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை யிலான பள்ளிகள் ஜூன் 5 தேதி திறக்கப் படுகிறது.

ஜூலை 12 இல் விண்ணில் பாய்கிறது சந்திரயான்-3 

சென்னை, மே 22- சந்திரயான்-3 விண்கலத்தை ஜூலை 12 ஆம் தேதி விண்ணில் செலுத்த வுள்ளதாக இஸ்ரோ நிறுவனம் அறி வித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன மான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்ய 2008 இல் சந்திரயான்-1 விண்கலத்தை அனுப்பியது. அந்த சோதனை நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங் களை உறுதி செய்தது. இதையடுத்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் விதமாக சந்திரயான்-2 விண்கலம் நவீன வசதிகளுடன் உருவாக்கப் பட்டது. இந்த சந்திரயான்-2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 2019 ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டு, 2019 செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப்பாதையை சென்ற டைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறு  காரணமாக திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது. அதேநேரம், விண்கலத் தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றி கரமாக நிலை நிறுத்தப்பட்டது. இந் நிலையில் சந்திரயான்-3 திட்டத்தை சுமார் ரூ. 615 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இந்த விண்கலம் ஜூலை 12 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக தக வல்கள் கிடைத்துள்ளன.

மின்சார வாரியத்தில் 103 பேர் நியமனம்

சென்னை, மே 22- தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரி ழந்த 103 பணியாளர்களின் வாரிசு தாரர்களில், தொழில்நுட்ப உதவியாள ராக 24 நபர்களுக்கும், இளநிலை  உதவியாளராக (கணக்கு) 2 நபர்களுக்கும், மின் கணக்கீட்டாள ராக 14 நபர்களுக்கும், தட்டச்சராக 1 நபருக்கும், களப்பணி உதவி யாளராக 56 நபர்களுக்கும், உதவி வரை வாளராக 1 நபருக்கும், காவலாளியாக 5 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சி யில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டா லின், செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அதி காரிகள் கலந்து கொண்டனர். 

‘ஆசிரியர் பணி வசதியான இடத்தில் பணி பெறுவது அல்ல’

சென்னை, மே 22- “மாணவர்களுக்கு கல்வி, திறமை களை போதிப்பதுதான் ஆசிரியர் பணியின் நோக்கமே தவிர, தனக்கு வசதியான இடத்தில் பணி பெறுவது அல்ல” என சென்னை உயர் நீதி மன்றம் தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம், திருத்துறை ப்பூண்டியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அனுமதிக் கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமான ஆசிரியர்கள் பணியாற்றுவதை கண்ட றிந்த அரசு, உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல் செய்து  உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, அப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றிய துரைராஜ், புவியியல் ஆசிரியர் சிங்காரவேலு, அறிவியல் ஆசிரியர் புவனேஸ்வரி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்த னர். இந்த வழக்குகள் நீதிபதி கார்த்தி கேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசிரியர் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, “ஆசிரியர்களின் சேவை வேறு பள்ளிகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் அதை மன முவந்து ஏற்றுக் கொண்டு தாமாக அப்பள்ளிகளுக்கு இடமாறுதல் பெற்றுச் செல்ல வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.

உலகச் செய்திகள்

கியூபாவுக்கு சென்று கொண்டிருந்த வழக்கமான விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க ரஷ்யா முடிவெடுத் துள்ளது. தற்போது சுற்றுலாவுக்கான விமானங்கள் மட்டும் அவ்வப் போது சென்று வருகின்றன. ஜூலை 1 ஆம் தேதி முதல் வழக்க மான போக்குவரத்து விமானங்கள் கியூபாவுக்கு செல்லத் துவங்கும் என்று ரஷ்யாவின் துணை பிரதமர் டிமிட்ரி செர்னிஷென்கோ தனது செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.

இஸ்ரேல் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் புகுந்து படைகள் நடத்திய தாக்குதலில் மூன்று பாலஸ்தீனிய இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இந்த மூன்று பேரையும் அடையாளம் கண்டுவிட்டதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. திடீரென்று அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய ராணுவம் நடத்திய இந்தத் தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் மூன்று வீடுகளையும் ராணுவம் தரைமட்டமாக்கியது.

லெபனானின் தெற்குப் பகுதியில் ஹெஸ்புல்லா அமைப்பு பெரிய அளவில் ராணுவப் பயிற்சியை நடத்தியிருக்கிறது. 2000 ஆவது ஆண்டில் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது அதை தடுத்ததோடு, எதிர்த்தாக்குதல் நடத்தி அவர்களைப் பின்னடையச் செய்த அமைப்பு ஹெஸ்புல்லா என்பது குறிப்பி டத்தக்கது. அத்தகைய தாக்குதல் மீண்டும் நடந்தால் எப்படி சமாளிப்பது என்று தங்கள் பலத்தை சோதிக்கும் வகையில் போர்ப் பயிற்சியை ஹெஸ்புல்லா செய்து பார்த்திருக்கிறது.