முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி.சாவந்த் மகாராஷ்டிராவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக திங்கள்கிழமை காலை காலமானதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.
**********************
பிரதமர் மோடி, வரும் 25 ஆம் தேதியும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 19 ஆம் தேதியும் தமிழகம் வருகின்றனர் என தமிழக பா.ஜ.க., மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறினார்.
**********************
மத்தியப்பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்திய 4 பேர் உயிரிழந்தனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
**********************
சாலைகளை நிர்மாணிப்பதற்கு ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து ரூ.15 ஆயிரம் கோடி கடன்பெற மகாராஷ்டிர அரசு திட்டமிட்டுள்ளதாக, மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் அசோக் சவாண் தெரிவித்துள்ளார்.
**********************
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளிடம் ஆன்லைன் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.
**********************
மஞ்சள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
**********************
சென்னையில் புதிதாக திறக்கப்பட்ட வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் 13 திருநங்கைகளை மெட்ரோ நிர்வாகம் பணி அமர்த்தியுள்ளது.
**********************
பிரச்சார மேடையிலேயே மயங்கி விழுந்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
**********************
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில்பெற்றோரை இழந்த சிறுமி நந்தினியின் கல்விக்கட்டணம் முழுவதையும் எஸ்.ஆர்.எம். கல்விக் குழுமம் ஏற்றுக்கொள்ளும் என பாரிவேந்தர் எம்.பி., தெரிவித்துள்ளார்.
**********************
காதலர் தினத்தையொட்டி, பெங்களூரு விமான நிலையத்திலிருந்து உலகம் முழுவதுமுள்ள 41 இடங்களுக்கு 2.73 லட்சம் கிலோ ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்ற விபரம் தெரியவந்துள்ளது.
**********************
பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலந்து விநியோகிப்பதால் வாகனங்களை கவனமாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்்பட்டுள்ளது.
**********************
வரத்து பாதியாகக் குறைந்ததால் சென்னையில் சின்ன வெங்காயம் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ ரூ.170 வரை விற்கப்படுகிறது.
**********************
அனைத்து மத்திய அரசுப் பணியாளர்களும் வேலை நாட்களில் அலுவலகம் வர உத்தரவிடப் பட்டுள்ளது. மத்தியப் பணியாளா் அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
**********************
இந்தியன் வங்கி-அலகாபாத் வங்கிகளின் சா்வா் இணைக்கும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்த தால், வங்கி சேவை மீண்டும் செயல்படத் தொடங்கியது.
**********************
சுங்கச் சாவடிகளில் ‘ஃபாஸ்டேக்’முறையை அமல்படுத்துவதற் கான காலக்கெடு மேலும் நீட்டிக்கப்பட மாட்டாது என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
**********************
இந்திய சிறைகளில் அடைக்கப் பட்டுள்ள கைதிகளில் 67 சதவீதம் பேர் இந்துக்களாகவும் 18 சதவீதம் பேர் முஸ்லிம்களாகவும் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் (எம்எச்ஏ) தெரிவித்துள்ளது.
**********************
மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை ஏற்றமானது, மத்திய அரசு மக்களின் மீதுநிகழ்த்தும் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள் ள்ளார்.
**********************
தமிழக அரசின் புதிய தொழிற் கொள்கை செவ்வாயன்று வெளியிடப்படுகிறது.
**********************
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ள னர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 6 லட்சத்து 21 ஆயிரத்தை தாண்டியது.
**********************
இந்தியாவில் ஒரே நாளில் 11,649 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 9 லட்சத்து 16 ஆயிரத்தை கடந்தது. 1.39 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,55,732 பேர் உயிரிழந்துள்ளனர்.