ஒட்டாவா
கனடா பாராளமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை செவ்வாயன்று (இந்திய நேரப்படி) தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற தொடக்க தருணத்தில் இருந்து ஆளுங்கட்சியான லிபரல் கட்சி முன்னிலை பெற்று வெற்றி பெற்றுள்ளது.
லிபரல் கட்சி 158 இடங்களிலும், கன்சர்வேட்டிவ் கட்சி 119 இடங்களிலும், பிளாக் கட்சி 34 இடங்களிலும், புதிய ஜனநாயகம் கட்சி 25 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பது பற்றி இன்னும் முடிவு எடுக்காமல் உள்ளது. ஓக்வில்லி தொகுதியில் போட்டியிட்ட ஆளுங்கட்சி (லிபரல்) அமைச்சரும், தமிழக வம்சாவளியினருமான அனிதா ஆனந்த் 16,719 வாக்குகள் பெற்று அசத்தல் வெற்றியை ருசித்துள்ளார்.