பிரிட்டனில் புதிய வகை கொரோனாவால் உயிரிழந்தோரின் விகிதம் அதிகம் என்று ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில் கடந்த ஆண்டு இறுதியில் பிரிட்டனில் முதன்முதலாக புதிய வகைக் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இது வகை தொற்று 30 விழுக்காடு முதல் 100 விழுக்காடு வரை ஆபத்தானது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
B.1.1.7 என அழைக்கப்படும் மாறுபட்ட தொற்றின் மரபணுக் குறியீட்டில் 23 வகைகள் உள்ளன.
அது மற்ற நோய் தொற்றை விட 40- லிருந்து 70 விழுக்காடு அதிக வேகமாகப் பரவக்கூடியது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.