world

img

அமெரிக்காவிற்கு வெனிசுலா கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க அறைகூவல்

அமெரிக்காவிற்கு வெனிசுலா கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க அறைகூவல்

கராகஸ்,டிச.20- அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெனிசுலாவில் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தவும் அந்நாட்டின் எண்ணெய் வளங்களை கொள்ளை யடிக்கவும் பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறார்.  இந்நிலையில் வெனிசுலாவின் இறையாண்மையை பாதுகாக்கவும் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவும் வெனிசுலா கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது.  இது தொடர்பாக அது வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தி ருப்பதாவது: டிரம்ப் சமீபத்தில் தெரிவித்த கருத்துகள், வெனிசுலா கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கெனவே எச்சரித்ததை உறு திப்படுத்தியுள்ளன. வெனிசுலா மற்றும் கரீபியன் நாடுகள் மீதான  அமெ ரிக்காவின் ஆக்ரோஷமான நட வடிக்கைகளானது, போதைப்பொ ருள் கடத்தலுக்கு எதிரானதோ அல்லது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கோ அல்ல, மாறாக, நம் நாட்டின் இயற்கை வளங்கள், நிலப்பரப்பு மற்றும் சொத்துக்களைக் கைப்பற்றுவ தற்காக அமெரிக்கா நடத்துகிற ஒரு காலனித்துவத் தாக்குதலாகும்.  வெனிசுலாவின் எண்ணெய்க் கப்பல்கள் மீது விதிக்கப்பட்டுள்ள முழுமையான முற்றுகையானது சர்வ தேசச் சட்டங்களை மீறும் செயலா கும். இந்தத் தடை ஏற்கனவே பொரு ளாதாரச் சிக்கலில் தவிக்கும் வெனி சுலா மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் சீரழிக்கும். அதே நேரத்தில் வெளிநாடுகளின் இந்தத் தாக்குதலை சாக்காக வைத்துக்கொண்டு ஜனாதிபதி நிக் கோலஸ் மதுரோ தலைமையிலான அரசு தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கைகளை அமல்படுத்தி வரு கிறது. இதனால் நாட்டில் உருவாகும் நெருக்கடிக்கு சாதாரண உழைக்கும் மக்களே பலியாகி வருகின்றனர். சுதந்திரத்துக்கு  பெரும் அச்சுறுத்தல் “வெனிசுலாவின் எண்ணெய், நிலம் மற்றும் சொத்துக்கள் அமெ ரிக்காவிற்குச் சொந்தம்” என டிரம்ப் கூறியுள்ளார். இது நமது சுதந்திரத்தி ற்கு விடப்படும் பெரும் அச்சுறுத்த லாகும். கரீபியன் மற்றும் பசிபிக் பகுதி களில் அமெரிக்கா நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளால் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். வெனி சுலாவின் கச்சா எண்ணெய் ஏற்றிச்  செல்லும் கப்பல்களை வழிமறித்துத் திருடுவது ஒரு சர்வதேசக் கொள்ளைச் செயல் தான்  என வெனிசுலா கம்யூ னிஸ்ட் கட்சிக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. கரீபியன் பகுதிகளிலிருந்து அமெ., ராணுவம் வெளியேற வேண்டும் மேலும் கம்யூனிஸ்ட் கட்சி சில கோரிக்கைகளையும் முன் வைத்துள் ளது.அவை 1. நாட்டின் வளங்கள் குறித்து முடி வெடுக்கும் மக்களின் உரிமையை அமெரிக்கா மதிக்க வேண்டும். 2. கரீபியன் பகுதிகளில் இருந்து அமெரிக்கா தனது ராணுவத்தை வெளியேற்ற வேண்டும். 3. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபி யன் நாடுகள் அனைத்தும் அமெ ரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது.