world

img

தீக்கதிர் உலக செய்திகள்

வெனிசுலாவில் ஆட்சிக்கவிழ்ப்பு  நடத்த அமெரிக்கா திட்டம்

வெனிசுலாவில் மதுரோ தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா திட்டமிடுகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தலைமையில் சிஐஏ இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப், ஸ்டீபன் மில்லர் ஆகியோர் மூலம் இந்த திட்டம் அரங்கேற்றப் படுவதாகவும் மதுரோ பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் 100 மணி நேரத்திற்குப் பிறகு என்ன செய்வது என்பது குறித்து அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இவர்கள் திட்டங்களை வகுத்துள்ளனர் எனவும் நியூயார்க் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.  

கத்தாரிடம் பகிரங்க மன்னிப்பு  கேட்ட நேதன்யாகு 

செப்டம்பர் மாத துவக்கத்தில் கத்தார் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்கியது. இதில் ஒரு கத்தார் குடிமகன் பலியானார். போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக அங்கிருந்த ஹமாஸ் தலைவர்களை கொல்லவே இத்தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேல் கூறினாலும் இது கத்தாரின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கிய நிலையில் அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்நிலையில் டிரம்ப்பை சந்தித்த பிறகு நேதன்யாகு கத்தாரிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டுள்ளார். 

தென் ஆப்பிரிக்க மருத்துவமனையில்  ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் 

தென்னாப்பிரிக்காவின் தெம்பிசா மருத்துவ மனையில் சுமார் 1,029 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பணத்தை குறைந்தபட்சம் மூன்று கும்பல்கள் கொள்ளைய டித்துள்ளன என விசாரணை ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இது “படுபயங்கரமான நிதிக் கொள்ளை” தேசத்தின் நம்பிக்கைக்குச் செய்யப் பட்ட மன்னிக்க முடியாத துரோகம் என தெரிவிக் கப்பட்டுள்ளது.  மேலும் பெரிய ஊழல் கூட்டம் இந்த விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானை மீண்டும் தாக்க  இஸ்ரேல், அமெரிக்கா திட்டம் 

ஈரானை மீண்டும் தாக்க இஸ்ரேலும் அமெரிக்காவும் திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகின்றன. ஈரான் மீது ஒரு தாக்குதல் நடந்தால் கூட, அது முழு அளவிலான போராக இருக்கும் என ஏற்கெனவே ஈரான் ஜனாதி பதி மசூத் பெசஸ்கியான் கடுமையான எச்ச ரிக்கையை விடுத்திருந்தார். மேலும் அது இஸ் ரேலுடன் மட்டுமல்லாது அமெரிக்காவுடனான போராக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள் ளது. இந்நிலையில் மத்திய கிழக்கு பகுதியில் எப்போது வேண்டுமானாலும் ஒரு புதிய போர் வெடிக்கலாம் என்ற பதற்றம் உருவாகியுள்ளது. 

வியட்நாமில் ‘புவாலாய்’ புயல்  பலி எண்ணிக்கை அதிகரிப்பு 

பிலிப்பைன்சில் தோன்றிய புவாலாய் புயல் வியட்நாமில் கரையை கடந்த போது இரு நாட்டிலும் கடுமையான சேதத்தை உருவாக்கியது. இந்த புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட இடர்ப்பாடுகளால் வியட்நாமில் 11 நபர்கள் பலியாகியிருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 21 பேரைக் காணவில்லை எனவும் அந்நாட்டு அதி காரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.