world

img

தீக்கதிர் உலக செய்திகள்

அமெ.வில் 1.5 லட்சம்  அரசு ஊழியர்கள் பணி நீக்கம்

அமெரிக்காவில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பணியை விட்டுச் செல்ல உள்ளனர். தாமாகவே பணியை விட்டு சென்றால் குறைந்த பட்ச பணம் பெறலாம். இல்லையென்றால் எந்த சலுகையும் இன்றி பணி நீக்கம் செய்யப்படுவீர்கள் என ஊழியர்களை “பைஅவுட்” எனும் திட்டம் மூலம் மிரட்டி பணி நீக்கம் செய்து வருகிறது டிரம்ப் நிர்வாகம். அமெரிக்க வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிகளவில் ஊழியர்கள் விலகுவது இதுவே முதல் நிகழ்வாகும்.

ரஷ்ய நட்பு நாடுகளுக்கு  ஜி-7 கூட்டமைப்பு மிரட்டல்

ரஷ்யாவிடம் பொருளாதார உறவுகளை கொண்டுள்ள நட்பு நாடுகளுக்கு ஜி-7 நாடுகளின் கூட்டமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கினால் அந்நாடுகள் மீது தடை உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளை எடுப்போம் என மிட்டல் விடுத்து ஜி-7 நாடுகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தகத்தை முடக்குவதற்காக அமெரிக்கா தொடர்ந்து இத்தகைய நடவடிக்கையை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.