world

img

டிரம்பின் காசா போர் நிறுத்த திட்டத்திற்கு ஹமாஸ் அமைப்பு பகுதியளவு ஒப்புதல்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் காசா அமைதி ஒப்பந்த திட்டத்தின், சில அம்சங்களுக்கு ஹமாஸ் அமைப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே 2 ஆண்டுகளாக போர் நீடித்து வரும் நிலையில்,  போரை நிறுத்துவதற்கு 20 அம்ச திட்டத்தை அறிமுகப்படுத்தினார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்.

20 அம்ச திட்டத்தை ஹமாஸ் அமைப்பினர் ஏற்காவிட்டால், இதுவரை யாருமே காணாத அளவுக்கு மிக மோசமான பேரழிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று டிரம்ப் மிரட்டலும் விட்டிருந்தார்.

டிரம்பின் 20 அம்ச திட்டத்துக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

போர் நிறுத்த நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவே இல்லை. காசா நகரத்தின் மீது கொடூர தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு தயாராக இருப்பதாகவும், காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

டிரம்பின் 20 அம்ச திட்டத்தை ஹமாஸ் பகுதியளவு ஏற்றுக்கொண்டுள்ளது. தங்கள் வசம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிக்கிறோம் என்றும் இதர விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறியுள்ளது.