அமெரிக்காவின் நிதிவெட்டு நோய் தொற்றுக்கு காரணமாகிறது
அமெரிக்காவின் நிதி வெட்டால் கொரோனா தொற்று போல உலகம் முழுவதும் நோய் தொற்றுக்கு வழி வகுத்துள் ளது என ஐ.நா. அவை தெரிவித்துள்ளது. உலகளவில் தட்டம்மை, மூளைக்காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களுக்கான மருந்துகள் வாங்குவது, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அதனை செலுத்தும் பணியையும் ஐ.நா மேற்கொள்கிறது. இதற்கான நிதியுதவியை அமெரிக்கா வெட்டி யுள்ளது. இதனால் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட 108 தடுப்பூசிகள் பற்றாக்குறை உருவாகியுள்ளது.
அமெரிக்க நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலகல்
டொனால்டு டிரம்ப் அரசாங்க செயல்திறன் துறை (டாட்ஜ்) என்ற பிரத்யேகமான துறையை உரு வாக்கி அதற்கு அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கை தலைமை அதிகாரியாக நியமித்தார். இந்நிலையில் அந்த துறையில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். அரசின் செலவுகளை குறைப்பது தான் அந்தத் துறையின் பிரதான பணி என சுமார் ரூ.34 ஆயிரம் கோடி வரை வெட்டப்பட்டது. மேலும் தொடர் பணி நீக்கங்களும், சர்வதேச நிறுவனங்களுக்கான நிதிகளும் வெட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலில் குண்டுவீச்சில் காசாவில் 30 பேர் பலி
இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமையன்று காசா பகுதி முழு வதும் குண்டு வீசி நடத்திய தாக்குதல்களில் 30 பாலஸ்தீ னர்கள் படுகொலையாகியுள்ளனர். காசாவில் தினந்தோ றும் இஸ்ரேல் குண்டு வீசி படுகொலை நடத்திக்கொண்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை உடைத்து மார்ச் 18 அன்று காசா பகுதி யில் இஸ்ரேல் தனது இனப்படுகொலையை மீண்டும் துவங்கி யது. கடந்த 2 ஆண்டு போரில் இதுவரை 51,400 பாலஸ்தீனர் களை படுகொலை செய்துள்ளது. இதில் பெண்கள் மற்றும் குழந்தை களே அதிகம்.
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை
இஸ்லாமாபாத், ஏப். 24- இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தொடர்ந்து பாகிஸ் தான் அரசு ஏவுகணை சோதனை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. கராச்சி கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஏவு கணை சோதனையை நடத்த பாகிஸ்தான் அரசு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் செவ்வாயன்று மாலை பயங்கர வாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலால் பாகிஸ் தான் தூதர்கள், மக்களை வெளி யேற்றுவது எல்லைகளை மூடுவது என தொடர் அறிவிப்புகளை இந்தியா வெளியிட்டு வருகிறது. எந்த நேரத்தில் வேண்டுமானலும் இந்த நடவடிக்கை பாகிஸ்தான் மீதான ராணுவ நடவடிக்கையாக மாறலாம் என்ற சூழல் உருவாகி வருவதால் பாகிஸ்தான் அரசும் அதை எதிர்கொள்ள தனது ராணுவத்தை தயார்படுத்தி வருகின்றது. மேலும் பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது அந் நாட்டு அரசு. இந்தியர்களுக்கு சொந்தமான, இந்தியர்களால் இயக்கப்படும் விமானங்களுக்கும் தடை பொருந்தும் எனவும் 48 மணி நேரத்தில் பாகிஸ்தானில் உள்ள இந்தியர்கள் வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாகா எல்லையை மூடுவதாக அறி வித்துள்ள பாகிஸ்தான் இந்தியா உடனான வர்த்தகத்துக்கும் முழு மையாக தடை விதித்துள்ளது. சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. பாகிஸ்தான் உடனான சிந்து நதி ஒப்பந்தத்தை இடைநிறுத்தி தண்ணீர் பகிர்வதையும் இந்தியா நிறுத்தியது. இது தண்ணீர் பற்றாக்குறை கொண்ட அந்நாட்டில் மிகப்பெரிய அளவிற்கு குடிநீர் பஞ்சத்தை உருவாக்கும். மேலும் அந்நாட்டின் 80 சதவீதமான விவசாய நிலங்கள் சிந்து நதி நீரை மட்டுமே நம்பியுள்ளன. தற்போது தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால் சுமார் 16 மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலத்திற்கு தண்ணீர் கிடைக்காது. இந்நிலையில் நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவது “கோழைத்தனமானது” என பாகிஸ் தானின் மின்துறை அமைச்சர் அவாய்ஸ் லெகாரி இந்தியாவை விமர்சித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்த பேச்சு கடைசி நேரத்தில் ரத்து
லண்டன், ஏப். 24- இங்கிலாந்தில் நடைபெற இருந்த உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தைக் கூட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் அமெரிக்க வெளியுற வுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ பங்கேற்க முடியாத சூழல் உருவானதாகக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சர்களும் பயணத்தை ரத்து செய்த னர். இதனால் உயர்மட்ட பேச்சுவார்த்தை, அதி காரிகள் மட்டத்தில் நடக்கும் பேச்சுவார்த்தை யாக மாறியது. அமெரிக்காவின் அதிருப்தியின் காரணமாக இவ்வாறு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமையன்று இங்கிலாந்து அதிகாரிகளுடன் ரூபியோ பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் போர்த் நிறுத்த பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த சூழலில் ரஷ்ய ராணுவம் உக்ரைன் தலைநகர் கீவ் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தி யுள்ளது. இந்த தாக்குதலில் 6 முதல் 9 நபர்கள் உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.