world

img

தீக்கதிர் உலக செய்திகள்

கியூபாவின் மருத்துவ குழுக்கள் மீது அமெரிக்கா தாக்குதல் 

ஆகஸ்ட் 13-இல் கியூபாவின் மருத்துவ குழுக்களைப் பயன்படுத்திய பிரேசில், கனடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் அதிகாரிகள் மீது விசாத் தடைகள் விதிக்கப்போவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ அறிவித்துள்ளார். மற்ற நாடுகளில் கியூபாவின் மருத்துவர்கள் பணிபுரிவது “கட்டாய உழைப்பு” என்று ரூபியோ குறிப்பிட்டுள்ளார்.  1960-களிலிருந்து கியூபாவின் மருத்துவ குழுக்கள் செயல்படத் தொடங்கின. பிரான்சிடமிருந்து அல்ஜீரியா விடுதலை பெற்ற பின்னர், பிரெஞ்சு மருத்துவர்கள் வெளியேறியதால் அங்கு கியூபாவின் முதல் மருத்துவக் குழு சென்றது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இத்தாலி உட்பட டஜன் கணக்கான நாடுகளுக்கு சென்று கியூபாவின் மருத்துவர்கள் செய்த பணி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  24,000 கியூபாவின் மருத்துவ ஊழியர்கள் பல நாடுகளில் இலவச மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருகின்ற னர். அமெரிக்க பொருளாதாரத் தடை களால் பாதிக்கப்பட்ட கியூபாவிற்கு வரு மானத்திற்கான முக்கிய வழிகளில் மருத்து வக் குழுக்கள் மூலம் பெறப்படும் நிதியும் ஒன்று.  வெளிநாடுகளுக்கு மருத்துவ உதவி குழுக்களை அனுப்பும் திட்டத்தை பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் நிறுத்தப்போவதில்லை என்று கியூபா அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்க தலைநகரில் இராணுவமயமாக்கல்

டிரம்ப் நிர்வாகம் அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டன் டிசிக்கு பல மாநிலங்களிலிருந்து மொத்தம் 1,100 தேசிய பாதுகாப்புப் படையினரை அனுப்பியுள்ளது. லூசியானா, மிசிசிப்பி, டென்னெசி, மேற்கு வர்ஜீனியா, தென் கரோலினா மற்றும் ஓஹியோ மாநிலங்களின் குடியரசுக் கட்சி ஆளுநர்கள் டிரம்பின் வேண்டுகோளை ஏற்று படையினரை அனுப்பியுள்ளனர்.  ஓஹியோ மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் அனுப்பப் பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொலம்பஸில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கறுப்பின தொழிலாளி வர்க்க நகரின் மீதான தாக்குதல் இது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.  வாஷிங்டன் டிசியில் குடியிருப்போர் தேசிய பாதுகாப்புப் படைகள் அனுப்பப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஊபர் ஓட்டுநர்கள், டெலிவரி தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் உட்பட பலர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்படுகின்றனர்.  “டிசியை விடுவிப்போம்” என்ற அமைப்பு, வாஷிங்டன் டிசியின் பாதுகாப்பு தேசிய பாதுகாப்புப் படையினருக்கு மாற்றப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதர மாநிலங்களிலும் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் நடத்துமாறு கேட்டுக்கொண்டனர்.

மலேசியா தோட்டத் தொழிலாளர்கள் பேரணி 

மலேசியா சோசலிஸ்ட் கட்சி யும் விவசாய சொசைட்டி ஆதரவுக் குழுவும் உருவாக்கியுள்ள “அனைத்து தோட்டத் தொழிலாளர் களுக்கான பொது வீட்டு வசதித் திட்டம்” என்ற மசோதாவை தயாரித்துள்ளன.  ஆகஸ்ட் 13-இல் நூற்றுக்கணக் கான மலேசிய தோட்டத் தொழிலா ளர்கள் பங்கேற்று மலேசியா சோசலிஸ்ட் கட்சி தலைமையில் கோலாலம்பூரில் உள்ள நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினர். சோசலிஸ்ட் கட்சித் தலைவர்களையும் சொசைட்டி உறுப்பினர்களையும் நாடாளு மன்றம் சென்றடைவதை போலீஸ் தடுக்க முயற்சித்தது.  மலேசியா முழுவதும் ரப்பர், பாமாயில், தேயிலை மற்றும் காபித் தோட்டங்களில் பல லட்சக்கணக்கான தொழிலாளர் கள் பணிபுரிகின்றனர். பெரும்பாலானோ ருக்கு குறைந்த கூலிதான். முதலாளிகள் வழங்கும் வீடுகளில் தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். ஆனால் ஓய்வுபெற்றா லோ பணி நீக்கம் செய்யப்பட்டாலோ வீடுகளைக் காலி செய்ய வேண்டும்.