states

img

அசாம் பாஜக அரசுக்கு குட்டு கோலாகாட் பகுதியில் முஸ்லிம் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை

அசாம் பாஜக அரசுக்கு குட்டு கோலாகாட் பகுதியில் முஸ்லிம் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை

புதுதில்லி வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் பாஜக ஆட்சி நடைபெற்று வரு கிறது. முதலமைச்சராக காங்கிரஸ்  கட்சியில் இருந்து தாவிய ஹிமந்தா  பிஸ்வா சர்மா உள்ளார். அசாமில்  அடுத்தாண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மீண்  டும் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க குஜராத், உத்தரப்பிர தேச மாநிலங்களில் அரங்கேற்றப் படும் வகுப்புவாத சம்பவங்களை அசாமில் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.  இந்த வகுப்புவாத சம்பவங்க ளில் மிக முக்கியமான ஒன்று கோலா காட் மாவட்டத்தில் முஸ்லிம் மக்  களை வெளியேற்றும் திட்டம்  ஆகும். கோலாகாட் மாவட்டத்தில்  70% அளவில் முஸ்லிம் வாழுகின் றனர். இந்த மாவட்டத்தின் புறநகர்  பகுதியான உரியம்காட் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வன நில ஆக்கிரமிப்பு மற்றும் குடி யுரிமை தொடர்பான உத்தரவுகளு டன் முஸ்லிம் மக்களின் வீடுகள் இடிக்கும் ஆயத்தப் பணிகள் தொடங்கும் நிலையில் உள்ளன.  குறிப்பாக உரியாம்காட்டில் உள்ள ரெங்கமா ரிசர்வ் காட்டில் 700 முதல் 800 காவல்துறையினர், சிஆர்பிஎப் படைகள் மற்றும் வனத்  துறை அதிகாரிகள் முன்னிலையில்  முஸ்லிம் வீடுகள் இடிக்கப்பட்டுள் ளதாக செய்திகள் வெளியாகியுள் ளன. அதுவும் சாதாரண குடிசை வீடுகள் இல்லை. பங்களா போன்று 7 தசாப்தங்களாக இருக்கும் பாரம்  பரிய வீடுகள் ஆகும். அசாம் பாஜக அரசின் இந்த அடாவடி நடவடிக்கையை எதிர்த்து  குடியிருப்பாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்  பட்டது. இந்த வழக்கு உச்சநீதி மன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா  மற்றும் ஏ.எஸ்.சந்துர்கர் அமர்வில்  ஆகஸ்ட் 22அன்று விசாரணைக்கு  வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சந்திர  உதய் சிங், அதீல் அகமது, “வனப் பகுதி நிலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதியில் வாழும் மனுதாரர் மட்டுமின்றி அனைத்து மக்களும்  நீண்டகாலமாக அப்பகுதியிலேயே வசித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். அசாம் வன விதிமுறை 1891, வன உரிமைகள் சட்டம் 2006 உள்ளிட்ட மறுவாழ்வு இல்லாமல் உடனடியாக குடியி ருப்பாளர்களை உடனடியாக வெளியேற்ற அசாம் அரசு தீவிர மாக செயல்பட்டு வருகிறது. இத ற்கு கவுகாத்தி உயர்நீதிமன்ற உத்த ரவும் கூட. குடியிருப்பாளர்களிடம் மின்சார இணைப்புகள், ரேஷன் கார்டுகள், ஆதார் எண்கள் வழங் கப்பட்டுள்ளன. அவர்களின் பெயர்  கள் தொகுதியின் தேர்தல் பட்டிய லில் தொடர்ச்சியாக பதிவு செய்  யப்பட்டு வருகிறது. பிறகு எப்படி  அவர்களுக்கு குடியுரிமை இல்லை  என்று கூறலாம்” என வாதிட்டனர். இருதப்பரப்பு வாதத்திற்கு பின்பு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா, ஏ.எஸ்.சந்துர்  கர்,”இந்த விவகாரம் தொடர்பாக  அசாம் மாநில அரசு மற்றும் வனத்  துறை விளக்கம் அளிக்க வேண்டும்.  நோட்டீஸ் அனுப்பாமல் எப்படி குடி யிருப்புகளை இடிக்க முடியும். மறு உத்தரவு வரும் வரை கோலா காட் பகுதியில் குடியிருப்புகளை பணிக்கு தடை விதிக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர். தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசா ரணை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.