states

img

வாக்கு திருட்டை கண்டித்து பீகாரில் “இந்தியா” கூட்டணிக் கட்சியினர் பிரம்மாண்ட இருசக்கர வாகனப் பேரணி

வாக்கு திருட்டை கண்டித்து பீகாரில் “இந்தியா” கூட்டணிக் கட்சியினர் பிரம்மாண்ட இருசக்கர வாகனப் பேரணி

பூர்னியா பீகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர  திருத்தம் மற்றும் வாக்கு திருட்டை கண்டித்து காங்கிரஸ்  மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்  காந்தி, ராஷ்டிரிய ஜனதா தளம் தலை வரும், பீகார் எதிர்க்கட்சித் தலைவ ருமான தேஜஸ்வி மாநிலம் முழு வதும் “இந்தியா” கூட்டணிக் கட்சி ஆதரவுடன் “வாக்கு உரிமை யாத்திரையை” மேற்கொண்டு வருகின்றனர். பீகார் சசராமில் ஆகஸ்ட் 17  அன்று இந்த யாத்திரை தொடங்கி யது. மாநிலம் முழுவதும் 16 நாட்கள், 20 மாவட்டங்கள் வழியாக 1,300 கி.மீ., தூரம் தொலைவில் செல்ல  உள்ள இந்த “வாக்கு உரிமை யாத்திரை” செப்டம்பர் 1 ஆம் தேதி  பாட்னாவில் பிரம்மாண்ட பேரணி யுடன் முடிவடைகிறது.  இந்நிலையில், ஞாயிறன்று பூர்  னியா மாவட்டத்தில் உள்ள அராரியா  நகர தெருக்களில் வாக்கு உரிமை யாத்திரையின் ஒரு பகுதியாக இரு சக்கர வாகனப் பேரணி நடை பெற்றது. ராகுல் காந்தி, தேஜஸ்வி  உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலை யில் “இந்தியா” கூட்டணிக் கட்சி யினர் இந்த  இருசக்கர வாகனப் பேர ணியில் பங்கேற்றனர்.

“மோடியைப் போன்று ஒரு பொய்யரை பார்த்ததே இல்லை” இருசக்கர வாகனப் பேர ணிக்கு இடையே ராஷ்டி ரிய ஜனதாதள கட்சித் தலைவ ரும், பீகார் எதிர்கட்சித் தலைவரு மான தேஜஸ்வி கூறுகையில், “மோடியை விட பெரிய பொய்  பேசும் பிரதமர் இதுவரை இருந்த தில்லை.நானும் கேள்வி பட்ட தில்லை. சமூகத்தில் விஷத்தை யும் வதந்திகளையும் பரப்புவதில்  மோடியைப் போன்று விட வேறு  யாரும் சிறப்பாக செயல்பட முடி யாது. அவரது பணியில் முதன்  மையானது விஷத்தை பரப்பு வது தான்” எனக் கூறினார்.