கொல்கத்தா மாணவி பலாத்காரம் 4 குற்றவாளிகளுக்கு எதிராக 658 பக்க குற்றப்பத்திரிக்கை
மேற்குவங்க மாநிலத்தில் திரிணா முல் காங்கிரஸ் ஆட்சி நடை பெற்று வருகிறது. முதல மைச்சராக மம்தா பானர்ஜி உள்ளார். மம்தா பானர்ஜி பெண் என்றாலும் மாநி லத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதி ரான வன்முறை சம்பவங்கள் அதிகள வில் நிகழ்ந்து வருகின்றன. கடந்த ஜூன் 25ஆம் தேதி இரவு கொல் கத்தா சட்டக் கல்லூரியில் பயிலும் 24 வயது மாணவி, கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாவலர் அறையில் வைத்து கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், கல்லூரி யின் தற்காலிக ஊழியரும், திரிணாமுல் மாணவர் அமைப்பின் முன்னாள் நிர்வா கியுமான மனோஜித் மிஸ்ரா (31), மாண வர்கள் பிரமித் முகோபாத்யாய் மற்றும் ஜைப் அகமது, பாதுகாவலர் பினாகி பானர்ஜி (51) என 4 பேர் கைது செய்யப் பட்டனர். 4 பேர் மீதும் அலிப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காவல்துறை தனது முதல் குற்றப்பத்தி ரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. 658 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிக்கையில், 170 பக்க முக்கிய ஆதாரங்கள், 80 சாட்சிகளின் வாக்குமூலங்கள், டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் மற்றும் தடயவியல் அறிக் கைகள் இடம்பெற்றுள்ளன.