பஞ்சாப்பில் கோர விபத்து எரிவாயு டேங்கர் லாரி வெடித்து 7 பேர்
சண்டிகர், ஆக.24 - பஞ்சாப் மாநிலம் மண்டியாலா அட்டா அருகே சனிக்கிழமை அன்று இரவு ஹோஷியார்பூர் - ஜலந்தர் சாலையில் மினி லாரி - எல்பிஜி டேங்கர் லாரி மோதின. இந்த விபத்தில் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியது. தீ விபத்தில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 20 பேர் அமிர்தசரஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். ஞாயிறன்று மாலை நிலவரப்படி காயமடைந்த 20 பேரில் 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 15 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.