சிபிஎம் எம்.பி., சு.வெங்கடேசன்
முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் என்னவானார்? எங்கே மறைந்தார்? எங்களது கவலையெல்லாம் அதே போன்ற நிலமை சி.பி.இராதாகிருஷ்ணன் (தற்போதைய துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர்) அவர்களுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான். தமிழ்நாட்டை சேர்ந்தவரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கும் இருக்கிறதல்லவா?
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கிய மோடி அரசு, தற்போது தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் ஏழைகளின் வாக்குகளைத் திருட விரும்புகிறது. பீகாரில் இது நடக்க “இந்தியா” கூட்டணி அனுமதிக்காது. அரசியலமைப்பு நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமைகளை உறுதி செய்கிறது. சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு பீகார் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.
சமாஜ்வாதி எம்.பி., அவதேஷ் பிரசாத்
உத்தரப்பிரதேச விவசாயிகள் உரம் கிடைக்காமல் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஒரு டன் யூரியா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், யார் அதை எடுத்தார்கள் என்ற எந்த தகவல் இதுவரை இல்லை. இன்று, உரம் இல்லை. நாளை மக்களுக்கு உணவு கிடைக்காமல் போகலாம்.
ஆம் ஆத்மி மூத்த தலைவர் பிரியங்கா கக்கர்’
அரசியலமைப்பு 130ஆவது திருத்த மசோதா (முதலமைச்சர்களின் பதவி பறிக்கும் திட்டம்) பாஜகவின் அரசியல் வியாபாரத்தை சட்டபூர்வமாக்கும் மசோதா தான். வேறொன்றும் கிடையாது. ஆனால் இதனை அமல்படுத்தினால் மோடி மன்னர் ஆகிவிடுவார்.