இந்தியாவில் நுழைந்தது ஓபன் ஏஐ நிறுவனம்
ஓபன் ஏஐ செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்அப் நிறுவனம் இந்தியாவில் தனது அலுவலகத்தை அதிகாரப்பூர்வமாகத் துவங்கியுள்ளது. சாட் ஜிபிடி என்ற பிரபலமான செயற்கை நுண்ணறிவு சக்தியை இந்த நிறுவனம் தான் அறிமுகம் செய்தது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,இந்தியாவில் அலுவலகம் திறப்பதன் மூலம் இந்திய அரசுடன் இணைந்து இந்தியாவிற்கான செயற்கை நுண்ணறிவு திட்டத்திற்கு ஆதரவு அளிக்க முடியும் என தெரிவித்துள்ளது.
டிரம்ப்பை விமர்சித்த முன்னாள் ஆலோசகர் வீட்டில் சோதனை
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வா கத்தில் தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகராக இருந்த ஜான் போல்டன் வீடு மற்றும் அலுவலகத்தில் அந்நாட்டின் புலனாய்வுத்துறையான எப்பிஐ சோதனை நடத்தியுள்ளது. இந்தியா மீதான டிரம்ப்பின் வரிவிதிப்புகள் தவறு என அவர் விமர்சித்து வந்தார். இந்நிலையில் அவர் இல்லத்தில் இந்த சோதனை நடந்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இந்த சம்ப வத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என டிரம்ப் நழுவியுள்ளார்.
அமெரிக்காவை தவிர்த்து பிரேசிலிடம் சோயா இறக்குமதி செய்யும் சீனா
உலகில் அதிக சோயா இறக்குமதி செய்யும் நாடாக சீனா உள்ளது. இதன் சோயா தேவை பெருமளவு அமெரிக்காவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது டிரம்ப் ஆரம்பித்துள்ள வர்த்தகப் போரின் காரணமாக அமெரிக்காவிடம் படிப்படியாக இறக்குமதியை குறைத்து விட்டு உலகளவில் சோயா உற்பத்தியில் இரண்டாவது நாடாக உள்ள பிரேசிலிடம் இருந்து இறக்குமதியை அதிக ரித்து வருகிறது சீனா. இந்த மாற்றம் அமெரிக்க விவசாயச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
உக்ரைனுக்கு 3 நிபந்தனைகளை தெளிவுபடுத்திய புடின்
உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தம் தொ டர்பாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸி க்கு மூன்று நிபந்தனைகளை ரஷ்ய ஜனாதிபதி புடின் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார். நேட்டோ அமைப்பில் இணையும் முடிவை கைவிட வேண்டும், டான்பாஸ் பகுதியை மீண்டும் உரிமை கொண்டாடக் கூடாது; அதனை உக்ரைன் விட்டுக் கொடுக்க வேண்டும். உக்ரைனில் இருக்கும் வெளி நாட்டு ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என ஏற்கனவே விதித்த நிபந்தனைகளை போர் நிறுத்த பேச்சுவார்த்தை தீவிரமடையும் வேளையில் மீண்டும் புடின் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆக.26 வரை சிறை
ஊழல் குற்றச்சாட்டில் கைது செய் யப்பட்டுள்ள இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவை ஆக.26 வரை சிறையில் அடைக்க கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது மனைவியின் பட்ட மளிப்பு விழாவில் அவர் கலந்து கொண்ட பய ணத்திற்கான செலவுகளை அரசு நிதியில் இருந்து பயன்படுத்தியதாக அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து நடந்த சிஐடி விசாரணையில் ரணிலின் பதில் திருப்திய ளிக்காத நிலையில் அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் ஆக்கிரமிப்புக்கு எதிரான வெற்றி தின கொண்டாட்டம் : பலத்தை பறைசாற்ற ராணுவ அணிவகுப்பு நடத்தும் சீனா
பெய்ஜிங்,ஆக.23- ஜப்பானின் ஆக்கிரமிப்பு போருக்கு எதிரான சீனா வெற்றிபெற்ற 80 ஆவது ஆண்டு நிறை வைக் கொண்டாடும் விதமாக செப்டம்பர் 3 அன்று பிரம்மாண்டமான ராணுவ அணிவகுப்பு நடத்த உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இந்த அணிவகுப்பிற்காக கடந்த சில மாதங்க ளாக பயிற்சி நடைபெற்றுள்ளது. ஆகஸ்ட் 17 அன்று இதற்கான இறுதி ஒத்திகை நடைபெற்றுள்ளது எனவும் சீனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 3 அன்று நடைபெறும் இந்த அணிவகுப்பானது 70 நிமிடங்கள் நீடிக்கும் எனவும் இந்த அணிவகுப்பில் இந்த உலகத்திற்கு தங்கள் ராணுவம் கண்டு பிடித்துள்ள பல வகை யான புதிய வகை நவீன ஆயுதங்களை காட்சிப் படுத்தும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரில் (1939-1945) நாஜி-பாசிசத்திற்கு எதிரான வெற்றி மற்றும் அப்போரில் சீனாவை ஆக்கிரமிக்க முயற்சித்த ஜப்பானின் தாக்குதலையும் அந்நாட்டு மக்களின் ஆதரவுடன் முறியடித்தது. இரண்டாம் உலகப்போரின் வெற்றி தினத்தை சீனா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள் வெவ்வேறு நாட் களில் கொண்டாடுகின்றன. அதன்படி சீனா செப். 3 அன்று இந்த வெற்றி தினத்தை கொண்டாடுகிறது. 1931 முதல் 1945 வரை சீனா மீது ஜப்பான் நடத்தி வந்த ஆக்கிரமிப்புப் போரின் காரணமாக சுமார் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழந் துள்ளனர். 1937 இல் சீனாவின் நான்ஜிங் பகுதி யில் நடந்த படுகொலை மிகவும் கொடுமையா னது. இந்த தாக்குதலில் மட்டும் சுமார் 3,00,000 க்கும் மேற்பட்ட சீனர்கள் ஜப்பானால் படுகொலை செய்யப்பட்டனர். கடைசியாக சீனாவின் 70 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாட 2019 இல் தியானன்மென் சதுக்கத்தில் ராணுவம் அணிவகுப்பு நடத்தப் பட்டது. அதன் பிறகு தற்போது செப்டம்பர் 3 அன்று தான் ராணுவ அணிவகுப்பு நடக்க உள்ளது. இந்த அணிவகுப்பின் மூலமாக சீனா தனது புதிய தலைமுறை ஆயுதங்களை காட்சிப்படுத்த வாய்ப்பு உள்ளது என பரவலாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக சீன மேஜர் ஜெனரல் வு சேகே பேசுகையில், ஹைப் பர்சோனிக் ஏவுகணைகள், வான் பாதுகாப்பிற் கான ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள், தொழில் நுட்ப ரீதியாக மேம்பட்ட ஆயுதங்கள் இந்த பேரணி யில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.