world

img

தீக்கதிர் உலக செய்திகள்

பதற்றத்தை தூண்டிய அமெரிக்கா : சீனா போர்ப் பயிற்சி

சீன ராணுவத்தின் அனைத்துப் படைப்பிரிவுகளும் செவ்வாய்க்கிழமையன்று  (இன்று) ஜஸ்ட் மிஷன் 2025 என்ற பெயரில் போர்ப் பயிற்சியில் ஈடுபட உள்ளன.  இந்தப் போர் பயிற்சியானது தைவானைச் சுற்றியுள்ள ஐந்து முக்கிய பகுதிகளை மையமாகக் கொண்டு நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இதற்காக இந்தப் பகுதிகளில் கப்பல்கள், விமானங்கள் பயணத்திற்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தைவானுக்கு அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ஆயுதக்கொள்முதல் ஒப்பந்தத்தை கொடுத்த நிலையில் அந்நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இப்பயிற்சி நடைபெற உள்ளது.

சோமாலியாவில் தலையீடு : இஸ்ரேலுக்கு ஹவுதி எச்சரிக்கை  

சோமாலியா நாட்டின் ஒருபகுதியாக உள்ள சோமாலிலாந்தை தனிநாடாக கடந்த வாரம் இஸ்ரேல் அறிவித்தது. இதற்கு  இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, மற்றும் 20 நாடுகளின் வெளியுற வுத்துறை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. மேலும் சோமாலிலாந்து பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தின் செயல்பாடுகள் கண்டறியப்பட்டால் அதை ராணுவ இலக்காக கருதி தங்கள் ராணுவம் தாக்குதல் நடத்தும் என ஹவுதி அமைப்பின் தலைவர் அப்துல்மாலிக் அல்-ஹூதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

ஜெர்மனியில் வேலைவாய்ப்புகள் : வரலாற்றில் இல்லாத அளவு சரிவு

  ஜெர்மனியில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் இதுவரை இல்லாத அளவிற்கு  மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ள. வழக்கமாக 7 புள்ளிகளாக இருக்கும் வேலைவாய்ப்பு குறியீடு, 5.7 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. அந்நாட்டில்  வேலைச் சந்தை எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் பல மாதங்களாக முடங்கியுள்ளது. ரஷ்யாவிலிருந்து மலிவான எரிபொருள் இறக்குமதி குறைந்ததால் இதனால் மின் கட்டணம், எரிவாயு விலை உயர்ந்து ஜெர்மனியின் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டதால் வேலைகள் குறைந்து வருகின்றன.

முதியோர் இல்லத்தில் தீ விபத்து : இந்தோனேசியாவில் 16 பேர் பலி

 இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியாகியுள்ளனர். மேலும் படுகாயமடைந்த 15 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மின் கசிவு காரணமாக ஞாயிற்றுக்கிழமையன்று இரவு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் முதியவர்கள் பலரும் தீயில் சிக்கியுள்ளனர். தற்போது பலியானவர்களின் உடல்கள் குடும்பத்தினரின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தாரிக் ரஹ்மான் தேர்தலில் போட்டி

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், வங்கதேச தேசியக் கட்சியின் செயல் தலைவருமான தாரிக் ரஹ்மான், நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வழக்குகளின் காரணமாக தப்பிச்சென்று  17   ஆண்டுகள் இங்கிலாத்தில் இருந்த அவர் கடந்த டிசம்பர் 25-ஆம் தேதி வங்கதேசம் திரும்பினார். டிசம்பர் 27 அன்று வங்கதேசத்தில் வாக்களிக்கும் உரிமைக்காக விண்ணப்பித்துள்ளார்.

உக்ரைன் - ரஷ்யா போர் விரைவில் அமைதி ஒப்பந்தம்?

புளோரிடா,டிச.29- உக்ரைன்-ரஷ்யா போரை  முடிவு க்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப் படும் கட்டத்தில் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப் தெரிவித்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர் பாக டிரம்ப், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகியோருக்கு இடையி லான முக்கிய பேச்சுவார்த்தை ஞாயிற்றுக் கிழமையன்று புளோரிடாவில் உள்ள டிரம்பின் மார்-ஏ-லாகோ இல்லத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பிற்கு முன்பாக  ரஷ்ய ஜனாதிபதி புடினுட ன் டிரம்ப் தொலைபேசியில் உரையாடி னார். அதன் பிறகு புடின் அமைதியை விரும்புகிறார் என  டிரம்ப் தெரிவித்தார்.  சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியா ளர்களிடம் பேசிய டிரம்ப், “இரு தரப்பின ருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படு வதற்கு மிக நெருக்கமான சூழல் நிலவு கிறது” என்று தெரிவித்தார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்பட்ட 20 அம்ச அமைதித் திட்டத்தில் சுமார் 90 சதவிகித திட்டங்க ளில் ஒருமித்த கருத்துக்கள் ஏற்பட்டுள்ள தாக ஜெலன்ஸ்கி தெரிவித்தார். குறிப்பாக, ஜெலன்ஸ்கி கேட்டு வந்த நேட்டோ உறுப்பினருக்கு இணையான பாதுகாப்பு உத்தரவாதம் தொடர்பான விஷயங்களில் 100 சதவிகிதம் உடன் பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இருப்பினும், நில எல்லை தொடர் பான விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. டான்பாஸ் (Donbas) உள்ளிட்ட கிழக்குப் பகுதி களை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிவு செய்துள்ளது. ஆனால்  உக்ரைன் அதனை  ஏற்க மறுத்து வருகிறது. இதனால் இந்த முடிவுகளில் சிக்கல் உள்ளது. இதன் காரணமாக தற்போதைய போர் நடந்து வரும் எல்லைகளிலேயே போரை நிறுத்திவிட்டு, அங்கு ஒரு “ஆயுதமற்ற மண்டலத்தை” (Demilitarized Zone) உருவாக்குவது குறித்தும் விவாதிக் கப்பட்டு வருகிறது. ஆனால் உக்ரைன் தனது படைக ளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். தற்போது ரஷ்யா கைப்பற்றி யுள்ள பகுதிகளை ரஷ்யாவிடமே உக்ரைன் ஒப்படைத்து விட வேண்டும். நேட்டோவில் இணையும் முடிவை முழு மையாகக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. மேலும் உக் ரைன் முன்வைக்கும் தற்காலிக போர் நிறுத்தத் திட்டம் இந்த போரை மேலும் நீட்டிக்கவே செய்யும் என்றும் ரஷ்யா கடுமையாக விமர்சித்து வருகிறது.  வரும் வாரங்களில் இந்த ஒப்பந்தம் அனைவராலும் ஏற்கப்படுமா என்பது குறித்து தெளிவான முடிவு தெரிய வரும் என டிரம்ப் கூறியுள்ளார். இதற்கி டையே ஜனவரி மாதம் அமெரிக்காவில் ஐரோப்பியத் தலைவர்களுடன் இணை ந்து மீண்டும் ஒரு உச்சிமாநாட்டை நடத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார். ஒருவேளை ரஷ்யா வசம் உள்ள உக்ரைன் நிலத்தை அந்நாடு விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், உக்ரைன் மக்கள் பொதுவாக்கெடுப்பு மூலம் அதற்கு அனுமதி அளிக்க வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.