world

img

தீக்கதிர் உலக செய்திகள்

அதிகாரிகள் மீதான தடைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் தியரி பிரெட்டன் உள்ளிட்ட ஐந்து ஐரோப்பிய அதிகாரிகளுக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் , பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இணையத்தில் வெறுப்புப் பேச்சுகள், பொய்த் தகவல்களைக் கட்டுப்படுத்த ஐரோப்பாவில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது எக்ஸ், மெட்டா போன்ற அமெரிக்க நிறுவனங்களை கட்டுப்படுத்துவதால் அமெரிக்கா இந்தத் தடைகளை விதித்துள்ளது.  

மீண்டும் கார் குண்டுவெடிப்பு : ரஷ்யாவில் 3 போ் பலி

ரஷ்யாவில் மீண்டும் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. டிச.24 அன்று அந்நாட்டு தலைநகர் மாஸ்கோவில்  நடத்தப்பட்ட தாக்குதலில் 2 காவல்துறை அதிகாரிகள் உள்பட 3 போ் பலியாகியுள்ளனா். ரஷ்ய ராணுவத்தின் முக்கிய தளபதியான ஃபானில் சார்வாரோவ் கார் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டே  நாட்களில் மீண்டும் ஒரு  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல்களில் உக்ரைன் மற்றும் ஐரோப்பிய உளவுத்துறையின் தொடர்புகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.  

பயங்கரவாதத்தை ஒழிக்க  சஹேல் கூட்டு ராணுவம்  

சஹேல் நாடுகளாக உள்ள மாலி, நைஜர், புர்கினா பாசோ ஆகிய நாடுகள் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள கூட்டு ராணுவத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. டிசம்பர் 20 அன்று மாலி தலைநகரான பமாகோவில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடை பெற்றுள்ளது.  ஆப்பிரிக்க நாடுகளின் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதற்காகவும், உள்நாட்டுக் குழப்பத்தை உருவாக்கவும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவால் திட்டமிட்டு அப்பகுதியில் பயங்கரவாதக் குழுக்கள் வளர்த்து விடப்படுவது குறிப்பிடத்தக்கது.  

அணு ஆயுதம் வேண்டாம் : ஜப்பான் அரசுக்கு மக்கள் எதிர்ப்பு

 ஜப்பான் அணு ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர்  அலுவலக பாதுகாப்பு அதிகாரி சமீபத்தில் கருத்துக்கு தெரிவித்தார். இக்கருத்துக்கு ஜப்பானில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இரண்டாம் உலகப் போரில் அணு குண்டுவீச்சால்  பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்களின் அமைப்புகள், இதற்குக் கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. அவ்வறிக்கையில் அணு ஆயுதங்களை உருவாக்க  கூடாது. பிற நாடுகளின் ஆயுதங்களையும் ஜப்பானில் வைக்கக்கூடாது என தெரிவித்துள்ளன. 

வடக்கு காசாவை ஆக்கிரமித்து கட்டடங்கள் இஸ்ரேல் அமைச்சர் காட்ஸ்  அறிவிப்பு

டெல்அவிவ்,டிச.25-  வடக்கு காசாவை ஆக்கிரமித்து அங்கு புதிய கட்டடங்களை இஸ்ரேல் கட்டமைக்கப் போவதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.  கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி  போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகு இஸ்ரேல் சுமார் 857 முறை அவ்வொப்பந்தத் தை மீறியுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள் ளது.  இந்நிலையில் தான் வடக்கு காசாவை ஆக்கிரமிக்கப்போவதாக இஸ்ரேல் அமைச்சர் பேசியுள்ளார். வடக்கு காசா பகுதியில் ராணுவ-விவ சாய புறக்காவல் நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றும் காட்ஸ் அறிவித்துள்ளார்.  கடந்த 2005 ஆம் ஆண்டு காசாவிலிருந்து இஸ்ரேல் பகுதிக்குள் 21 குடியிருப்புகள் கொண்டு செல்லப்பட்டன. அவற்றுக்கு பதி லாக இந்த புதிய குடியிருப்புகள் கட்டப்படும் என கூறியுள்ளார்.  போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு முன்ன தாகவே காசா கடற்கரைப் பகுதியை ரியல் எஸ்டேட் தொழிலுக்காக ஆக்கிரமிக்கப் போகிறேன் என டிரம்ப் பேசி இருந்தார். இஸ்ரேலும் காசா பகுதிகளை ஆக்கிரமிக்கும் வேலைகளை துவங்கி இருந்தது.   இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்காக அப்பகுதிகளில்  இஸ்ரேலின் ராணுவம் நிலை நிறுத்தப்படும்  என்று கூறப்பட்டுள்ளது. இது  இஸ்ரேல் ராணுவம் காசாவிலிருந்து முழுமை யாக வெளியேற வேண்டும் என்ற போர் நிறுத்த ஒப்பந்த  நிபந்தனைக்கு எதிரான தாகும்.  இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, அமெரிக்க அதிகாரிகள் இதற்கு கடும் அதிருப்தியைத் தெரிவித்ததுடன் விளக்கமும் கோரினர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் காட்ஸ் தனது கருத்திலிருந்து பின்வாங்கினார். இஸ்ரேல் பாதுகாப்புத்துறை  அமைச்சர் இவ்வாறு பேசுவதற்கு முன்  காசா ஊடக அலு வலகம் ஒரு முக்கிய தகவலை வெளி யிட்டது, அதில் அக்டோபர் 10 முதல் இதுவரை இஸ்ரேல் சுமார் 875 முறை பல்வேறு வகையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது. இந்த சமயத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 411 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  2023 அக்டோபர் 7 முதல் இஸ்ரேல் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 70,942-ஐக் கடந்துள்ளது.

மேற்குக் கரையில் ஆக்கிரமிப்பு : இஸ்ரேலுக்கு 14 நாடுகள் கண்டனம்


ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன மேற்குக் கரை பகுதியில் புதிதாக 19  இடங்களை ஆக்கிரமித்து யூதக் குடியேற்றங்களை அமைக்க இஸ்ரேல் அனுமதி கொடுத்துள்ளது. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு  பிரான்ஸ், பிரிட்டன், கனடா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகள்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த முடிவை இஸ்ரேல் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவை வலியுறுத்தியுள்ளன.