tamilnadu

3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தமிழக அரசு பதவி உயர்வு

3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தமிழக அரசு பதவி உயர்வு

சென்னை, டிச. 25 - மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குப் பதவி  உயர்வு வழங்கி, தமிழக அரசு அரசாணை  வெளியிட்டுள்ளது. 7 ஐ.ஏ.எஸ். அதிகாரி களுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்திலும், 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளர் அந்தஸ்திலும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 1995 பேட்ச்சை சேர்ந்த 7 ஐ.ஏ.எஸ். அதி காரிகள் 2026 ஜனவரி ஒன்றாம் தேதி முதல்  கூடுதல் தலைமைச் செயலாளர் நிலைக்கு பதவி உயர்வு பெறுகின்றனர். இதன்படி சென்னை மெட்ரோ ரயில் நிறு வன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை  ஆணையர் ஜெயா, சுகாதாரம் மற்றும் குடும்ப  நலத்துறை செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சி கழகத்தின்  தலைவர் சந்தியா வேணுகோபால் சர்மா, நிதித்துறை செயலாளர் த. உதயச்சந்திரன், இந்திய சர்வேயர் ஜெனரல் ஹிதேஷ் குமார் எஸ்.மக்வானா, பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சந்திர மோகன் ஆகியோர் கூடு தல் தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர். 2002 பேட்ச்சை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதி காரிகளான தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் சிகி தாமஸ் வைத்யன், மனிதவள மேலாண்மை துறை  செயலாளர் சமயமூர்த்தி, முதல்வர் அலுவ லக செயலாளர் சண்முகம், பொது மற்றும் மறு வாழ்வு துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தக்கர், சமூக நலன் மற்றும் மகளிர் அதிகார மளிப்பு துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன்  ஆகியோர் முதன்மைச் செயலராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.  இந்த பதவி உயர்வுகள் 2026 ஜனவரி 1  முதல் அமலுக்கு வரும்.