tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

வாக்காளர் பட்டியல் குளறுபடி நீக்கம் 66 லட்சம்; வந்ததோ 1.68 லட்சம்!

சென்னை: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டிய லில் இடம் பெயர்ந்தவர்களாக 66.44 லட்சம் பேர் நீக்கப்பட்டு உள்ள நிலையில், புதிதாக பெயர் சேர்க்கக் கோரி கடந்த 6  நாட்களில் வெறும் 1.68 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர் என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். எஸ்ஐஆர் பணியின்படி, வரைவு  பட்டியலில் மொத்தம் 97.38 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். வாக்காளர்கள் ஜனவரி 18 வரை தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே  பாடப் புத்தகங்கள் வழங்க உத்தரவு சென்னை: தமிழ்நாட்டில் 2025-26ஆம் கல்வி யாண்டுக்கான மூன்றாம் பருவத்துக்கு பாடப்புத்தகம், நோட்டுகள் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் விநியோ கம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரி வித்துள்ளது. பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்குவது மற்றும்  பாதுகாப்பாக வைப்பது குறித்து மாவட்ட நிர்வாகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. விநியோக மையங்களில்  இருந்து வழங்கும்போது ஆசிரியர்கள், மாணவர்களை இந்த  பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. வழங்கப்படும் விவரத்தை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி சென்னை: தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி கோரி தவெக தலைவர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்  நடத்திய, அக்கட்சி நிர்வாகி அஜிதா ஆக்னல் தூக்க மாத்திரை கள் உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக சாமுவேல் என்ப வரை விஜய் நியமித்ததை எதிர்த்தும், தான் முறையாக கட்சிப்  பணியாற்றியதால் தனக்குத் தான், பதவி வழங்க வேண்டும்  என அஜிதா கோரியிருந்தார். மேலும், விஜய்யை சந்திக்க  முடியாத விரக்தியிலும் மனம் உடைந்தும் இந்த முயற்சியை  மேற்கொண்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ள னர். தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வருகிறார். தேமுதிகவுக்கு 6 தொகுதிகள்: பிரேமலதா ஆவேசம்! சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிக வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது என வெளியான தக வலை கண்டித்து அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக பேசியுள்ளார். இது அதிகாரப்பூர்வ தகவல் அல்ல என்றும், இந்த தகவலை வெளியிட்ட கட்சிக்கு  அழிவுகாலம் ஆரம்பமாகி விட்டது என்றும் கூறினார். தேமுதிக சார்பில் எந்த அனுமதியும் இல்லாமல் செய்தி வெளி யிடக்கூடாது என்றும், ஜனவரி 9 அன்று நடக்கும் மாநாட்டில்  கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என்றும்  அவர் தெரிவித்தார்.

‘கூட்டணியில் ஓபிஎஸ் - டிடிவி இல்லையாம்’ கிருஷ்ணகிரி: பாஜக  மாநில தலைவர் நயினார்  நாகேந்திரன் கிருஷ்ணகிரி யில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஓ.  பன்னீர்செல்வமும், டிடிவி  தினகரனும் எங்கள் கூட்ட ணியில் தற்போதைக்கு இல்லை. அதிமுக கூட்டணி யில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக வெளிவரும் தகவலில் உண்மை இல்லை என்றும் திமுக -  தவெக ஆகிய இரு கட்சி களுக்கும் இடையே தான் போட்டி என்று விஜய் கூறு வதில் துணியும் உண்மை இல்லை என்றும் கூறி னார். பாமக பொதுக்குழு: ஜி.கே. மணி உறுதி சென்னை: சேலத்தில் வரும் டிசம்பர் 29-ஆம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடை பெறும் என அக்கட்சி மாநில துணைத் தலை வர் ஜி.கே.மணி தெரிவித்து உள்ளார். இந்த பொதுக் குழு கூட்டத்தில் கூட்டணி தொடர்பான முடிவை கட்சித் தலைவர் ராமதாஸ் அறிவிப்பார் என்று அவர் கூறியுள்ளார். சீமான் மீண்டும் அடாவடி சென்னை: நூறு நாள் வேலையை நாம் தமி ழர் கட்சி ஏற்கவில்லை என  அக்கட்சி ஒருங்கிணைப்பா ளர் சீமான் தெரிவித்து உள்ளார். மேலும் பல்லாங் குழி, தாயக்கட்டை, சீட்டு கட்டு போன்ற விளையாட்டு கள் தான் வேலை நேரத்தில் நடைபெறுகின்றன என்றும் கிராமப்புற விவ சாயத் தொழிலாளர்களின் உழைப்பை சீமான்  கொச்சைப்படுத்தி யுள்ளார்.