world

img

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்!

அமெரிக்கா, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாகவும், உலக சுகாதார அமைப்பில் இருந்தும் வெளியேறுவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 47-ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் நேற்று பதவியேற்றுக் கொண்டார். இதை அடுத்து, சில முக்கிய அறிவிப்புகளும், உத்தரவுகளும் வெளியானது. அதன்படி,
கடந்த 2021-இல் அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட விவகாரத்தில் சுமார் 1,600 ட்ரம்ப் ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றச்சாட்டப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் வகையில், அது தொடர்பாக தேசிய அவசர நிலையாக அறிவித்து, அந்த உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
அமெரிக்கா, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாகவும், உலக சுகாதார அமைப்பில் இருந்தும் வெளியேறுவதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இனி ஆண், பெண் ஆகிய இரு பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும்; ராணுவத்தில் மாற்று பாலினத்தவர்களுக்கு தடை; சிறார் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கப்படும் எனவும் அரிவித்துள்ளார்.