ஈரானை அமெரிக்கா தாக்கும் அபாயம் இந்தியர்களை அழைத்துவர ஒன்றிய அரசு திட்டம்
டெஹரான்,ஜன.16- ஈரானில் உள்நாட்டுச் சூழல் மோச மடைந்துள்ள நிலையில் அங்குள்ள இந்தியக் குடிமக்களைப் வெளியேற்ற இந்தியா தயாராகி வருவதாக தெரி விக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் மிக மோசமான பொரு ளாதார நெருக்கடியில் உள்ள ஈரானில் மக்கள் அரசுக்கு எதிரான போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர். இச்சூழலைப் பயன் படுத்தி அந்நாட்டில் ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்காவும், இஸ்ரேலும் திட்டமிட்டு வருகின்றன. டிரம்ப் நேரடியாக அந்நாட்டு மக்களி டம் அமைப்புகளை கைப்பற்றுங்கள்; உங்களுக்கான உதவி வந்து கொண்டுள் ளது என ஆட்சிக்கவிழ்ப்புக்கு தூண்டு தல் விடுத்துள்ளார். மேலும் மத்திய கிழக்கில் கத்தார் நாட்டில் அமைந்துள்ள அல்-உதெய்த் என்ற அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவத்தலத்தில் இருந்து முக்கிய அதிகாரிகளை அமெரிக்கா வெளியேறக் கூறியுள்ளது. இந்த நகர்வுகள் எப்போது வேண்டு மானாலும் இஸ்ரேலும் அமெரிக்காவும் எந்நேரம் வேண்டுமென்றாலும் ஈரான் மீது போர் தொடுக்கலாம் என்ற அச் சத்தை உருவாகியுள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச் சர் எஸ். ஜெய்சங்கர், ஈரான் வெளியுற வுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி ஆகியோருக்கு இடையே புதன்கிழமை நடைபெற்ற தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, அந்நாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்து வரும் திட்டத்திற்கான பணிகள் தொடங்கிய தாகவும் கூறப்படுகிறது. ஈரானில் உள்ள இந்தியத் தூதரக மும் அங்குள்ள இந்தியர்களைத் தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ள தாகத் தெரிவித்துள்ளன. மாணவர்கள், பயணிகள், வணிகத்துறை நிபுணர்கள் என 10,000 க்கும் மேற்பட்ட இந்தியர் கள் ஈரானில் உள்ளனர். ஈரான் ராணுவமும் காவல்துறை யும் உள்நாட்டுச் சூழலை கட்டுக்குள் வைத்திருப்பத்திலேயே கவனம் செலுத்தி வரும் நிலையில் இந்தியர்க ளை பாதுகாப்பாக வெளியேற்றுவது கடினமான காரியமாக மாறியுள்ளது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஈரானில் உள்ள இந்தியர்கள் தொடர்பு கொள்வதற்காக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அவசர உதவி எண்கள் அறிவித்துள்ளது. +989128109115, +989128109 109, +989128109102, +989932179 359 மின்னஞ்சல்: cons.tehran@mea.gov.in
