world

img

தீக்கதிர் உலக செய்திகள்

இங்கிலாந்தில் வேலையின்மை  5 சதவீதம் அதிகரிப்பு

இங்கிலாந்தில் வேலைவாய்ப்புச் சந்தை தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது.  தற்போது ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையான மூன்று மாத காலப்பகுதியில் வேலையின்மை விகிதம் 5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அந்நாட்டின் தேசியப் புள்ளிவிவரங்களுக்கான அலுவலக தகவல்படி, டிசம்பர் 2020 முதல் பிப்ரவரி 2021 வரையிலான காலத்திற்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த வேலையின்மை அளவாக இது பதிவாகியுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவு

ஆப்கன் தலைநகர் காபூலில் இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 2.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கடியில் 140 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல்வெளி யாகவில்லை. கடந்த 8 ஆம் தேதியன்று 4.4 ரிக்டர் அளவுக்கு அந்நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய -கனடா வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்தை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஜி7 கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு கனடாவில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்க சென்ற ஜெய்சங்கர், அனிதா ஆனந்துடன் இந்தியா-கனடா இருதரப்பு கூட்டுறவை மீண்டும் மேம்படுத்துவது குறித்து உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் மெக்சிகோ வெளியுறவுத்துறை அமைச்சர் ஜுவான் ரமோனையும்  ஜெய்சங்கர் சந்தித்தார்.  

தாய்லாந்து-கம்போடியா  எல்லையில் மீண்டும் பதற்றம் 

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்தை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஜி7 கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு கனடாவில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்க சென்ற ஜெய்சங்கர், அனிதா ஆனந்துடன் இந்தியா-கனடா இருதரப்பு கூட்டுறவை மீண்டும் மேம்படுத்துவது குறித்து உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் மெக்சிகோ வெளியுறவுத்துறை அமைச்சர் ஜுவான் ரமோனையும்  ஜெய்சங்கர் சந்தித்தார்.  

தாய்லாந்து-கம்போடியா  எல்லையில் மீண்டும் பதற்றம் 

தாய்லாந்து எல்லையில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பகுதியில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து எல்லைப்பகுதி  கிராமத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மக்களைக் கம்போடியா வெளியேற்றியுள்ளது. கடந்த ஜூலை மாத இறுதியில் இரு நாடுகளுக்கும் இடையே ஐந்து நாட்கள் போர் நடந்தது. இதில் இரு தரப்பிலும் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது. 

அமெ.வில் முடிவுக்கு வரும்  அரசு முடக்கம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் தாக்கல் செய்த நிதி மசோதாவிற்கு ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தராததால் பல துறைகள் முடங்கி விட்டன. அரசு முடங்கியிருப்பது குறித்து ஜனநாயகக் கட்சியினருடன் சமரசம் செய்ய வாய்ப்பில்லை என டிரம்ப் உறுதியாகக் கூறி வந்தார். இந்நிலை யில் கட்சி நிலைப்பாட்டை மீறி சமரசம் செய்துகொள்ள சில ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் ஆதரவு கொடுத்ததை தொடர்ந்து சுமார் 43 நாட்களுக்குப் பிறகு அமெரிக்க அரசு முடக்கம் முடிவுக்கு வருகிறது.

இஸ்ரேல் இனப்படுகொலையின் தாக்கம் : 10 லட்சத்துக்கும் அதிகமான வாழ்க்கை ஆண்டுகளை இழந்த பாலஸ்தீனக் குழந்தைகள் 

காசா, நவ.13- இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலையின் விளைவாக காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் லட்சக்கணக்கான வாழ்க்கை ஆண்டுகளை இழந்துள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.  பொருளாதார நிபுணர் சம்மி சஹ்ரான், அறுவை சிகிச்சை நிபுணர் கஸ்ஸான் அபு- சித்தா ஆகியோரின் ஆய்வில் இந்த அதிர்ச்சித் தகவல்  வெளிவந்துள்ளது. அவர்களின் அறிக்கையில் காசாவில் உள்ள பாலஸ் தீனர்கள் 30 லட்சத்துக்கும் அதிகமான ஆண்டு களை இழந்துள்ளதாகவும், 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10 லட்சத்துக்கும்  அதிகமான வாழ்க்கை ஆண்டுகளை இழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். போர் நிறுத்தத்திற்குப் பிறகும் தொடரும் சுகாதார நெருக்கடி போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து அம லில் இருப்பதாகக் கூறிக்கொண்டாலும் இஸ்ரேல் ராணுவம் அதனை தொடர்ந்து மீறி வரு கிறது. குறிப்பாக பாலஸ்தீனர்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவப் பொருட்களை காசாவுக்குள் செல்ல அனுமதி மறுத்து வருகிறது. இதனால் அங்கு சுகாதார நெருக்கடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  போர் நிறுத்தத்திற்குப் பிறகு நிவாரணப் பொருட்களை அனுமதிப்பதாக அறிவிப்புகள் வந்தபோதிலும் உண்மையில் உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் காசாவிற்குள் தேவை யான அளவில் வரவில்லை என ‘எமர்ஜென்சி’ என்ற சர்வதேச அமைப்பு   நவம்பர் 6 அன்று எச்சரித்திருந்தது. பல நோயாளிகளுக்கு தினமும் கட்டுப் போட வேண்டியுள்ளது, ஆனால் உதவிகள் மறுக்கப்படுவதால் எஞ்சியிருக்கும் ஒருசில துணி பேண்டேஜ்களைக்கூட சிறியதாக வெட்டிப் பயன்படுத்தும் நிலை உள்ளதாக உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன.  பாலஸ்தீனர்களுக்கு தேவையான உதவி களைச் செய்ய ஒன்பது உதவி அமைப்புகள் விடுத்த 20க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை இஸ்ரேல் அதிகாரிகள் நிராகரித்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது. குளிர்காலம் துவங்கியுள்ள நிலையில் பாலஸ்தீனர்களுக்கு போர்வைகள், கூடாரங்க ளை அவசரமாக வழங்க வேண்டிய தேவை உள்ளது. இது சுகாதார நிலைமைகள் மேலும் மோசமடையாமல் தடுக்க உதவும்  என ஐ.நா அவை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் இதனையும் இஸ்ரேல் ராணுவம் தடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.