பீகாரில் இன்று வாக்கு எண்ணிக்கை
பாட்னா, நவ. 13- 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. முதல்கட்டமாக நவம்பர் 6ஆம் தேதி 121 தொகுதி களில் நடைபெற்ற வாக்குப் பதிவில் 65.09% வாக்குகள் பதிவாகின. தொடர்ந்து நவம்பர் 11ஆம் தேதி 122 தொகுதிகளுக்கு நடை பெற்ற இறுதிக்கட்ட வாக்குப் பதிவில் 68.76% வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், பீகார் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் வெள் ளிக்கிழமை காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன.