tamilnadu

img

தில்லி குண்டு வெடிப்பு; சதித்திட்ட டைரி பறிமுதல்?

தில்லி குண்டு வெடிப்பு; சதித்திட்ட டைரி பறிமுதல்?

புதுதில்லி, நவ. 13 - கார் குண்டு வெடிப்புச் சம்ப வத்தில், முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் டாக்டர் உமர் உன் நபி நடந்து செல்லும் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. தில்லி காவல்துறையானது, சுமார் 50 இடங்களில் இருந்து சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றியுள்ளது.  தில்லி குண்டுவெடிப்பு குற்றவாளி யாக கருதப்படும் டாக்டர் உமர் நவம்பர் 10-ஆம் தேதி செங்கோட்டை வளாகத்தை அடைவதற்கு முன்பு பிற்பகல் 3 மணிக்கு முன்னதாக தில்லியின் பல்வேறு பகுதிகள் வழியாக- வெடித்த காரை ஓட்டிச் சென்றது, தில்லி - மும்பை விரைவுச்  சாலையில் உள்ள சிசிடிவி கேமிராக் களில் பதிவாகியுள்ளது. எனினும் அவர், பதர்பூர் எல்லை வழியாகவே தில்லிக்குள் நுழைந்துள்ளார். தென்கிழக்கு மாவட்டத்திலிருந்து, அவர் கிழக்கு மாவட்டத்திற்கும், பின்னர் மத்திய மாவட்டத்தின் ரிங்  ரோட்டிற்கும் சென்ற அவர், அங்கி ருந்து, வடக்கு மாவட்டத்திற்குச் சென்றவர், அதைத் தொடர்ந்து வட மேற்கு மாவட்டத்தில் உள்ள அசோக் விஹார் சென்று, உணவு உண்ப தற்காக நின்றுள்ளார். பின்னர், மத்திய மாவட்டத்திற்குத் திரும்பிய அவர், ஒரு மசூதியைப் பார்வை யிட்டுள்ளார். பிற்பகல் 3:19 மணிக்கு வடக்கு மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை வாகன நிறுத்து மிடத்தை அடைந்துள்ளார். இதனிடையே, டாக்டர் உமர்  தங்கியிருந்த அல்-பலாஹ் பல்கலைக் கழக வளாக அறையிலிருந்து சில நோட்டு புத்தகங்கள், டைரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில், கடந்த இரண்டு ஆண்டு களாக அவர்கள் பல்வேறு சதித்திட்டங் களை தீட்டியிருப்பது தெரிய வந்திருப்பதாகவும் தகவல்கள் தெரி விக்கின்றன.