states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்

“உலகம் எதிர்கொள்ளும் ஆபத்துகள் - 2024” என்ற அறிக்கையை உலக பொருளாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில்  தவறான மற்றும் பொய்யான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்புவதில் உலகளவில் இந்தியா முதலிடம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா நிச்சயமாக விஸ்வகுருவாக (மோடி) மாறுகிறது.

மொழியியல் அறிஞர் பொற்கோ

இந்தியாவில் மாநிலங்களுக்குள் நேசமும் பண்பாட்டுப் பரிவர்த்தனைகளும் இருக்கின்றன. எதற்கும் மொழி தடையாக இல்லை. ஆனால் தேவையில்லாமல் மொழியில் அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்கள். இந்தியாவைத் தவிர உலகில் வேறெந்த நாட்டிலும் மொழியை அரசியலுக்கான ஆயுதமாகப் பயன்படுத்துவதில்லை.

பீகார் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சுக்லா

பீகார் மாநிலத்தின் வழியே பாயும் கங்கை நீர் மனிதர்கள் குளிப்பதற்கே தகுதியற்றது. கங்கை நீரில் மனித, விலங்கு கழிவுகளால் உற்பத்தியாகும் காலிபாம் என்ற பாக்டீரியா உள்ளதாக மாநில பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  கங்கை நீர் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி

ஒன்றிய அமைச்சர் ரக்சா காட்சேவின் மகளை ஷிண்டே சேனாவின் அலுவலகப் பணியாளர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர் என்பதை ஏக்நாத் காட்சே (ரக்சா மாமனார்) மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் வெட்கமின்மைக்கு எல்லையே இல்லை.