tamilnadu

img

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை ஆசிரியர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை 
ஆசிரியர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

போச்சம்பள்ளி அருகே நடுநிலைப் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்களை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் ஆசி ரியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரி வித்து, குற்றம் புரிந்த ஆசிரியர்கள் பிணை யில் வெளியே வராமல் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பள்ளி  மேலாண்மை குழுவை மாற்றிட வேண்டும்,பாதிக்கப்பட்ட மாணவி குடும்பத்திற்கு இழப்பீடு, மாணவியின் கல்விச் செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்றிட வலியுறுத்தியும் வாலிபர் சங்கம் சார்பில் தளி பேருந்து நிலையம் அருகில் ஒன்றிய செயலாளர் நஞ்சாரெட்டி தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நந்திஸ்,சீனிவாசன் ஆகியோர் முன்னிலை யில் வகித்தனர். சங்கத்தின் ஒன்றியத் தலைவர் அம்ரீஷ்,மாவட்டச் செயலாளர்கள் இளவரசன், மாநில செயற்குழு உறுப்பினர் சி.எம்.பிரகாஷ்,தேன்கனிக்கோட்டை மூத்த தலைவர்கள் பி.நாகராஜ் ரெட்டி, டி.எஸ். பாண்டியன்,வாலிபர் சங்க தலைவர் புருஷோத்தம ரெட்டி, சிபிஎம் தளி ஒன்றியச் செயலாளர் நடராஜன்,முன்னாள்  தலைவர்கள் ஆர்.சேகர்,அனுமப்பா, ஒன்றியப் பொருளாளர் திவாகர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.