tamilnadu

img

தொகுப்பூதிய, ஒப்பந்த பணியிடங்களில் நிரந்தர செவிலியர்களை நியமிக்க வேண்டும் எம்ஆர்பி செவிலியர்கள் மாநாடு வலியுறுத்தல்

தொகுப்பூதிய, ஒப்பந்த பணியிடங்களில் நிரந்தர செவிலியர்களை நியமிக்க வேண்டும் எம்ஆர்பி செவிலியர்கள் மாநாடு வலியுறுத்தல்

தொகுப்பூதிய, ஒப்பந்த செவிலியர் பணி யிடங்களில் நிரந்தர தன்மையுள்ள செவி லியர்களை பணியமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் சென்னை மாவட்ட முதல் மாநாடு சனிக்கிழமையன்று (மார்ச் 2) திருவல்லிக்கேணியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், பெரியார் நகரில் புதி தாக திறக்கப்பட்டுள்ள பன்நோக்கு மருத்துவமனையில் புதிய பணி இடங்கள் உருவாக்கப்படவில்லை. மாறாக, பிற மருத்துவமனைகளில் ஆட்குறைப்பு செய்து, அந்த ஊழி யர்களை கொண்டு பணியமர்த்தி இருப்பதை ரத்து செய்ய வேண்டும். புதிய பணியிடங்களை தோற்றுவித்து நிரந்தர தன்மையுள்ளவர்களை நியமிக்க வேண்டும். எம்ஆர்பி செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், உயர்நீதிமன்ற உத்தரவு, ஓய்வு பெற்ற நீதியரசர்கள் அடங்கிய குழுவின் பரிந்துரைப்படி தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் மற்றும் அனைத்து வித பலன்களையும் வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணி க்கைக்கு ஏற்ப நிரந்தர செவிலியர் பணி யிடங்கள் உருவாக்க வேண்டும், சென்னை மகப்பேறு மற்றும் குடும்ப நல மருத்துவமனையின் கட்டுப்பாட்டில் உள்ள சிதைந்து கிடக்கும் லாலி சீமாட்டி செவிலியர் காப்பகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாவட்டத் தலைவர் செ.அமுதா தலை மையில் நடைபெற்ற இந்த மாநாட்டை மாநில துணைத்தலைவர் து.அஸ்வினி கிரேஸ் ஜெபப்பிரியா தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் பி.மீனாட்சி செயலாளர் அறிக்கையும், பொருளாளர் ஆ.சாம்ஸ்டெல்லா பொருளாளர் அறிக்கையும் சமர்ப்பித்தனர். சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.சசிகலா, அரசு ஊழியர் சங்கத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளர் ம.அந்தோணிசாமி உள்ளிட்ட சகோதர அமைப்புகளின் தலைவர்கள் உரையாற்றினர். சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் நே.சுபின் நிறைவுரையாற்றினார். மாவட்டக்குழு தேர்வு மாவட்டத் தலைவராக செ.அமுதா, செயலாளராக பி.மீனாட்சி, பொருளாளராக ஆ.சாம்ஸ்டெல்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.