ஜாதவ்பூர் பல்கலை., மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறியது
மேற்கு வங்க கல்வித் துறை அமைச்சர் ஜாதவ்பூர் பல்க லைக்கழகத்துக்கு மார்ச் 1 அன்று பயணம் செய்த போது, மாணவர் சங்கத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என மாணவர்கள் அமைதியாக போரா ட்டம் நடத்தினர். 2017 முதல் மேற்கு வங்கத்தில் மாணவர் சங்கத் தேர்தல் நடை பெறவில்லை. ஜாதவ்பூரில் கடைசி தேர்தல் 2020இல் நடந்தது. ஆனால் மாணவர்களின் இந்த சட்டப் பூர்வமான கோரிக்கைக்கு பதிலளிக்கா மல், அவர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்த சில நபர்கள் அமைதியாக போராட்டம் நடத்திய மாணவர்களை தாக்கினர். கூடுதலாக, கல்வி அமைச்சரின் வாகனம் போராடிக் கொண்டிருந்த மாண வர்கள் மீது மோதிச் சென்றதாகவும், லக்கிம்புர் கேரி சம்பவம் (விவசாயிகள் போராட்டத்தின் போது நடந்த சம்பவம்) போன்று இது அமைந்ததாகவும் தக வல்கள் தெரிவிக்கின்றன.
இதில் பல மாணவர்கள் காயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், மாணவர்களை குற்றம் சாட்டும் விதமாக மேற்குவங்க அரசு கருத்து வெளியிட்டுள்ளது. மாணவர்கள் மீது வழக்குப் பதிவு இந்திரனுஜ் ராய் எனப்படும் முதலாமாண்டு மாணவர் அமைச்சரின் கார் மோதியதில் காயமடைந்து கொல் கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அமைச்சரின் காரை மறித்து அவருக்கு காயம் ஏற்படுத்தி, அவரது உடைமைகளைத் திருடியதாகக் குறிப்பி ட்டு இந்திரனுஜ் ராய் உள்பட பல மாணவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் மொத்தம் 7 வழக்கு கள் பதியப்பட்டுள்ளன. மேலும், அவர்கள் கல்லூரி வளாகத்தில் கல வரம் ஏற்படுத்தி பொதுச் சொத்திற்கு சேதம் உண்டாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு எதிராகவும் மாண வர்களை ஆதரித்தும், இந்திய மாணவர் சங்கம் மாநிலமெங்கும் போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து இந்திய மாணவர் சங்க மத்தியக் குழு மார்ச் 3 அன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தது. இதனையடுத்து திங்கள்கிழமை அன்று நாடு முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தின் கீழ் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.