திருவாரூரில் ரூ. 50 கோடியில் ஆடை உற்பத்தி ஆலை! புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
சென்னை, நவ. 13 - ‘தி சென்னை சில்க்ஸ்’ குழுமத்தைச் சேர்ந்த ‘எஸ்சிஎம் கார்மெண்ட்ஸ் (SCM Garments) பிரைவேட் லிமிடெட் நிறுவனம்’ திருவாரூர் மாவட்டத்தில் ஆடை உற்பத்தி அமைப்பை ரூ. 50 கோடி முதலீட்டில் அமைக்க உள்ளது. இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் முன்னிலையில், தலைமைச் செயல கத்தில் நடைபெற்ற நிகழ்வில், வியாழக் கிழமையன்று மேற்கொள்ளப்பட்டது. ஜவுளித் துறையில் முன்னணி நிறுவன மாக விளங்கும் எஸ்சிஎம் கார்மெண்ட்ஸ் குழுமத்தின் ரூ. 50 கோடி முதலீட்டிலான புதிய ஆடை உற்பத்தி நிலையம் மூலம் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி.அருண் ராய், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சுப்ரமணியன் மற்றும் SCM Garments நிறுவன நிர்வாகிகள் உடனிருந்தனர். 2030-க்குள் தமிழ்நாட்டின் பொருளா தாரம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அள விற்கு வளர்ச்சி பெறுவதற்கும், இளைஞர் களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற் கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
