பயங்கரவாதிகள் எப்படி ஆயுதங்களையும் பணத்தையும் பெறுகிறார்கள் ?
மோடியை திருப்பித்தாக்கும் ‘பழைய பேச்சு’
புல்வாமா மற்றும் பஹல்காம் தாக்கு தல்களுக்குப் பிறகு, 13 பேரைக் கொன்ற தில்லி தற்கொலை குண்டுவெடிப்புகள் பாஜக மற்றும் சங் பரிவாரங்களை மீண்டும் வேட்டை யாடத் தொடங்கியுள்ளன. குஜராத் முதலமைச்சராக இருந்த போது பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்க அன்றைய, ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) அரசாங்கம் முற்றி லும் தோல்வியடைந்தது’ என்று மோடி விமர்சித்திருந்தார். 2012 இல் மும்பை யில் நடந்த ஒரு பேரணியில் யுபிஏ அரசாங்கத்தைத் தாக்கி மோடி ஆற்றிய உரையின் வீடியோ காட்சிகள் இன்னும் சமூக ஊடகங்களில் கிடைக்கின்றன.
மோடி அன்று கூறியது
‘பயங்கரவாதிகள் ஆயுதங்களையும் பணத்தையும் பெறுகிறார்கள். அனைத்து நிதி பரிவர்த்தனைகளும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில், ஆர்பிஐ கட்டுப்பாட்டில் உள்ளன. உங்களிடம் அனைத்து அமைப்புகளும் உள்ளன. அங்கு இடைத் தரகர்கள் இல்லை. ஆனாலும், பயங்கர வாதத் தாக்குதல்களை ஏன் தடுக்க முடியாது? பயங்கரவாதிகளை ஏன் பிடிக்க முடியாது? நீங்கள் என்ன செய்கி றீர்கள்? பயங்கரவாதிகள் வந்து தாக்கி விட்டு தப்பிக்கிறார்கள். பிஎஸ்எப், கட லோர காவல்படை மற்றும் கடற்படை அனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. பிறகு பயங்கரவாதிகள் எப்படி நாட்டிற்குள் நுழைந்து தாக்குகிறார்கள்? பிரதமர் பதிலளிக்க வேண்டும்.’ தில்லி குண்டுவெடிப்புடன் இணைத்து, மோடியின் கடந்த கால உரைகள் விவாதிக்கப்படுகின்றன. ஆப ரேஷன் சிந்தூருக்குப் பிறகு, பயங்கர வாதிகள் மீண்டும் குரல் எழுப்ப மாட்டார்கள் என்று மோடி கூறியிருந்தார். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீரில் இருந்து பயங்கரவாதம் மறைந்துவிட்டது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் கூட கூறியிருந்தார். ஆனால் அடுத்தடுத்த சம்பவங்கள் பயங்கரவாத வலையமைப்புகள் இன்னும் செயலில் உள்ளன என்பதை நிரூபிக்கின்றன. தில்லி குண்டுவெடிப்பு மத்திய அரசு மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் மூக்கின் கீழ் நடந்துள்ளது என்பதும் அரசாங்கத்தின் தோல்வியை அம்பலப்படுத்தியுள்ளது. 2012 ஆம் ஆண்டு உரையில் எழுப் பப்பட்ட கேள்விகளுக்கு மோடியும் அமித் ஷாவும் இப்போது பதிலளிக்கும் நிலையில் உள்ளனர்.
