states

சுரங்கம் அமைக்க உச்சநீதிமன்றம் தடை

சுரங்கம் அமைக்க உச்சநீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சாரண்டா வனவிலங்கு சர ணாலயம் பகுதியில் சுரங்கம் அமைப்பது தொடர்பான வழக்கு வியாழனன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசார ணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்திற்குப் பின்பு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், “உயிரியல் பூங்காக்களின் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் சுரங்கம் அமைப்ப தால் வன விலங்குகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.அதனால் தேசிய உயிரியல் பூங்காக்கள், சரணாலயங்கள் மற்றும் அவற்றை சுற்றி ஒரு கி.மீ. சுற்ற ளவுக்குள் சுரங்கங்கள் அமைக்க தடை விதிக்கப்படுகிறது.  ஏற்கனவே கோவாவுக்கு விதித் துள்ள தடையை நாடு முழுவதற்கும் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது” என தீர்ப்பில் கூறப்பட்டுள் ளது.