world

img

தீக்கதிர் உலக செய்திகள்

உக்ரைனுக்கு வழங்கி வந்த  அமெ. ஆயுதங்கள் நிறுத்தம்

டிரம்பின் உத்தரவால் உக்ரைனுக்கான ஆயுத உதவி உடனடியாக நிறுத்தப்பட்டுவிட்டது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைனுக்கு இதுவரை அமெரிக்காவில் இருந்து சுமார் 71 சரக்கு கப்பல்களில் ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே முரண்பாடு அதிகரித்துள்ள நிலையில் வரும் மே மாதம் அமெரிக்காவின் அனைத்து வகையான உதவிகளும் முழுமையாக நிறுத்தப்பட உள்ளது எனவும் அமெரிக்க அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உதவிப் பொருட்கள் தடுப்பு : இஸ்ரேலுக்கு கண்டனம்

காசாவுக்கு செல்​லும் உதவிப் பொருட்​கள் விநி​யோகத்தை இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தடுத்து நிறுத்​தியதற்கு ஹமாஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. முதல் கட்ட போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்தை துவங்க ஹமாஸ் அமைப்பு அழைப்பு விடுத்தது. ஆனால் இஸ்ரேல் அதற்கு முன்வரவில்லை. ஆனால் ஹமாஸ் அமைப்பு சில முடிவுகளை ஏற்கவில்லை,பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை என இஸ்ரேல் குற்றம் சுமத்தி வருகின்றது.

நோய் தடுப்பு, கட்டுப்பாட்டில்   பெரும் இடைவெளி உள்ளது

கிழக்கு பசிபிக் நாடுகளில் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடுகளில் மிகப்பெரிய இடைவெளிகள் இருப்பதாக உலக சுகாதார மையத்தின் புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. கம்போடியா, லாவோஸ், கினியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், சாலமன் தீவுகள் ஆகிய நாடுகளில் இந்த இடைவெளி அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நாடுகள் நோய் பரவலை கண்டறிவதிலும் தொற்று  பரவலை தடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் நிதி வெட்டு    பதிக்கப்பட்ட மக்களுக்கு பேரழிவு

வெளிநாடுகள் மற்றும் அமைப்புகளுக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை வெட்டுவது உலகம் முழுவதும் மோசமான நிலையில் உள்ள மக்களுக்கு பேரழிவாக இருக்கும் என ஐ.நா பொதுச் செயலாளர் குட்டரெஸ் எச்சரித்துள்ளார். மேலும் இந்த நடவடிக்கை உலகளவில் அமெரிக்காவின் நலன்களுக்கு எதிரான தாக்கத்தையே ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்காவின் நிதி வெட்டு ஐ.நா அவைகளை கடுமையாக பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

30 ஆண்டில் இல்லாத வகையில்  ஜப்பானில் காட்டுத் தீ

ஜப்பானில் ஏற்பட்டுள்ள 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய காட்டுத் தீயை அணைக்க 1,700 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இக்காட்டுத் தீயில் இருந்து 4,600 மக்கள் வெளியேற்றப்பட உள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒபுனடோ என்ற  நகருக்கு அருகில் பிப் 27 அன்று ஏற்பட்ட காட்டு தீயில்  சுமார் 5,200 ஏக்கர் காடுகள் எரிந்துள்ளதாக தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.