சிறிய ரக விமானம் விபத்து: ஹோண்டுராஸில் 12 பேர் பலி
ஹோண்டுராஸில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் பிரபல இசையமைப்பாளர் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். லான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் சிறிய ரக வர்த்தக விமானம் ஒன்று 17 பயணிகளுடன் கடந்த திங்கள்கிழமை இரவு புறப்பட்டது. அந்த விமானம் லா சீபா நகர் நோக்கி சென்று கொண்டிருந்த சிறிது நேரத்திலேயே கடலில் விழுந்தது. பார்த்த மீனவர்கள் சிலர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கென்னடி படுகொலை: ஆவணங்கள் வெளியீடு
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி படுகொலை தொடர்பான 80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 1963 இல் ஜான் எஃப் கென்னடி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கென்னடி படுகொலை தொடர்பாக லீ ஹார்வி ஓஸ்வால் என்ற நபர் கைது செய்யப்பட்டார். கென்னடி ஏன் படுகொலை செய்யப்பட்டார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் வெளிவராத சூழலில் தற்போது விசாரணை ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளன.
மாணவர்களை பழிவாங்கும் டிரம்ப்
இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட கொலம்பியா பல்கலைக்கழக மாணவர் ஒருவரை நாடு கடத்த உள்ளது டிரம்ப் நிர்வாகம். இந்திய மாணவி ரஞ்ச னிக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக அவரே நாடு கடத்துவதற்கு பதிவு செய்து விட்டு கடந்த வாரம் கனடாவிற்கு சென்றுவிட்டார். இந் நிலையில் கலீல் என்ற மாணவரும் டிரம்ப் நிர்வா கத்தால் பதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை பாலஸ்தீனர்களின் மீதான அமெரிக்காவின் இனவெறியையே காட்டு கின்றது என கடுமையாக விமர்சித்துள்ளார்.
உக்ரைன் வீரர்களை சட்டப்படி நடத்த கோரிக்கை
ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து உக்ரைன் ராணுவம் பெருமளவில் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் குர்க்ஸ் பிராந்தியத்தை உக்ரைன் ராணுவம் 2024 இல் கைப்பற்றியது. தற்போது இப்பகுதியில் 86 சதவீதத்துக்கும் அதிகமான பகுதிகளை ரஷ்ய ராணுவம் மீட்டுள்ளது. நூற்றுக்கணக்கான உக்ரைன் வீரர்களையும் கைதுசெய்துள்ளது. அவர்களை சர்வதேசச் சட்டத்தின் அடிப்படையில் நடத்த வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
அரபு லீக் ஏற்ற திட்டத்தை கைவிட வலியுறுத்தும் அமீரகம்
போருக்குப் பிறகு காசாவை மறுகட்டமைப்பு செய்வது என எகிப்து வரையறுத்த மறுகட்டமைப்பு திட்டம் அரபு நாடுகளின் கூட்டமைப்பால் ஏற்றுக் க்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தை டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என அரபு அமீரகம் ரகசியமாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
டிரம்ப்புடன் 2 மணிநேர உரையாடல்: நிபந்தனைகள் விதித்த புடின்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகிய இருவரும் இரண்டு மணி நேரம் நடத்திய தொலைபேசி உரையாடலில் புடின் விதித்த நிபந்தனைகளுடன் ஒரு போர் நிறுத்த உடன்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. டிரம்ப் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தத்தை மேற் கொள்வதற்கான நடவடிக்கையை தீவிரப் படுத்தி வருகிறார். அதே போல ரஷ்யாவு டனான பொருளாதார உறவுகளை மீண்டும் மேற்கொள்ளும் முயற்சிகளையும் முன்னெ டுத்து வருகிறார். சவூதி அரேபியாவில் ஜெட்டா நகரில் உக்ரைன் அதிகாரிகளுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் நடைபெற்ற ஒரு பேச்சுவார்த்தையில் 30 நாட்க ளுக்கு போரை இடைநிறுத்துவது என அமெரிக்கா முன்மொழிந்த திட்டத்தை உக்ரைன் ஏற்றுக் கொண்டது.
இந்த முன்மொழிவு ரஷ்யாவின் ஒப்புத லுக்காக அனுப்பப்பட்டதுடன் அமெரிக்க தூதரும் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா சென்றார். எனினும் அந்த முன்மொழிவை ரஷ்யா ஏற்க வில்லை. இரு நாட்டுத் தலைவர்களும் நேரடி பேச்சுவார்த்தை நடத்தும் போது ஒரு உடன்பாடு எட்டப்படலாம் என கூறப்பட்டு வந்த நிலையில் மார்ச் 18 அன்று டிரம்ப்-புடின் ஆகிய இருவரும் 2 மணி நேரம் உரையாடினர். இந்த உரையாடலில் 30 நாட்களுக்கு இரு நாடுகளும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலை நிறுத்துவது என முடிவு செய்யப் பட்டுள்ளது.
மேலும் உக்ரைனும் ரஷ்யாவும் தங்கள் வசம் உள்ள போர்க் கைதிகளில் 175 நபர்களை மார்ச் 19 அன்று பரிமாற்றம் செய்து கொள்வது, நல்லெண்ணத்தின் அடிப்படையில் ரஷ்ய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற உக்ரைன் ராணுவ வீரர்களில் 23 நபர்களை ரஷ்யா விடுவிக்கும் என்று கூறப் பட்டுள்ளது. இதே நேரத்தில் உக்ரைனுக்கு இந்த 30 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து ராணுவ உதவிகள் செய்யக்கூடாது, அமெரிக்கா ராணுவம் மற்றும் உளவு உதவியை நிறுத்த வேண் டும் எனவும் ரஷ்யா நிபந்தனை வித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா-ரஷ்யா பொருளாதார உறவுகளை துவங்குவது குறித்தும் பேசப்பட்டுள்ளது. இருநாட்டு உறவுக ளை மறுகட்டமைப்பு செய்வதன் ஒரு பகுதியாக ஹாக்கி போட்டி நடத்தலாம் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.