அமெரிக்காவில் கடும் பனிப்புயல் 8,000 விமானங்கள் ரத்து
அமெரிக்காவில் வீசி வரும் கடும் பனிப்புயல் காரணமாக நாட்டின் பல பகுதிகள் கடும் பாதிப்பையும் இயல்பு வாழ்க்கையையும் சந்தித்து வருகின்றன. பனிப்புயல் காரணமாக 8,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் நாட்களில் மின்சாரம் துண்டிக்கப்படலாம், போக்குவரத்து முடங்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை மைனஸ் 40 டிகிரி செல்சியஸுக்கும் கீழ் குறைந்துள்ளது. இதனால் “வெளியே சிறிது நேரம் நின்றாலே மூளை வேலை செய்வதை நிறுத்திவிடுகிறது,” என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா சாசனம் கிழிக்கப்படுகிறது லூலா கடும் விமர்சனம்
டிரம்ப் முன்மொழிந்துள்ள “அமைதி வாரியம்” ஒரு “புதிய ஐ.நா” அவையை உரு வாக்கும் முயற்சி என்று பிரேசில் ஜனாதிபதி லூலா குற்றம் சாட்டியுள்ளார். ஐ.நா அவை யைச் சரி செய்வதற்குப் பதிலாக என்ன நடக்கி றது? டிரம்ப் தனக்கு மட்டுமே உரிமையான ஒரு புதிய ஐ.நா-வை உருவாக்க முன்மொழிகி றார். ஐ.நா சாசனம் தற்போது கிழித்தெறி யப்படுகிறது. உலக விவகாரங்களில் “காட்டுத் தனமான சட்டத்தை” அனுமதிக்க முடியாது. அனைத்து நாடுகளுக்கும் பன்முகத்தன்மை யுடைய உறவுகளே முக்கியம் என்றும் லூலா குறிப்பிட்டுள்ளார்.
உலக சுகாதார அமைப்பில் இணைந்தது கலிஃபோர்னியா
உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறிய நிலையில், அவ்வமைப்பில் அமெரிக்காவின் கலிஃபோர்னி யா மாகாணம் தன்னிச்சையாக இணைந்துள் ளது. டிரம்ப்பின் முடிவு மிகவும் ஆபத்தானது என்றும் சுகாதார பாதுகாப்பில் சர்வதேச நாடுகளுடன் இணைந்து கலிஃபோர்னியா தொடர்ந்து செயல்படும் என்றும் அம்மாகாண ஆளுநர் கவின் நியூசோம் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அமைப்புகளில் இருந்து வெளி யேறுவது, நிதியை குறைப்பதன் மூலம் அவ்வ மைப்புகளை முடக்கும் வேலையை டிரம்ப் மறை முகமாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடும் பனிப்பொழிவு, மழை ஆப்கனில் 61 பேர் பலி
ஆப்கனில் பெய்து வரும் கடும் பனிப் பொழிவு, கனமழை காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித் துள்ளது.மேலும்110 பேர் காயமடைந்துள்ளனர், 458 வீடுகள் பகுதியாகவோ அல்லது முழு மையாகவோ சேதமடைந்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது. உயிரிழப்புகள் கடந்த புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை யிலான மூன்று நாட்களில் நிகழ்ந்துள்ளன. நாட்டின் மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களே இந்த இயற்கை சீற்றத்தினால் பெரும் பாதிப்பு க்கு உள்ளாகியுள்ளன.
ஐரோப்பிய நாடுகள் மீதான வரிகள் தற்காலிக நிறுத்தம்
கிரீன்லாந்து தொடர்பான விவகாரத்தில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், எட்டு ஐரோ ப்பிய நாடுகள் மீது விதிக்கவிருந்த வரிகளை அமெ ரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். தொடர்ந்து நடந்த தீவிர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கிரீன்லாந்து விவ காரத்தில் ஒரு “ஒப்பந்த கட்டமைப்பு” எட்டப் பட்டது. இதனைத் தொடர்ந்தே, வரிவிதிப்பு மிரட்ட லை அமெரிக்கா இடை நிறுத்தியுள்ளது. ஐரோப் பாவின் பதிலடி நடவடிக்கைகளின் காரணமாக அமெரிக்கப் பங்குச்சந்தையில் பெரும் சரிவு ஏற் பட்டதும் டிரம்ப் முடிவுக்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.
எந்தத் தாக்குதலையும் ‘முழுமையான போராகவே’ கருதுவோம் : ஈரான் எச்சரிக்கை
டெஹரான்,ஜன.24- ஈரான் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலையும் “எங்களுக்கு எதிரான முழுமையான போராகவே” கருதுவோம் என்று அந்நாட்டின் உயர்நிலை அதிகாரி ஒருவர் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ஈரானில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்களின் வாழ்வா தாரம் சிதைந்து போயுள்ளது. இதனால் 2025 டிசம்பர் மாதம் முதல் ஈரானில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. உள்நாட்டுச் சூழலைப் பயன்படுத்தி அந்நாட்டில் ஆட்சிக்கவிழ்ப்பை நடத்த அமெரிக்காவும் இஸ்ரேலும் திட்ட மிட்டுள்ளன. இந்நிலையில் தான் ஈரான் மக்கள் நாட்டின் அதிகார அமைப்புகளை கைப்பற்ற வேண்டும் எனவும் மக்களை கொலை செய்தால் ராணுவத்தை அனுப்புவேன் எனவும் டிரம்ப் நேரடியாக மிரட்டல் விடுத்தார். இதற்கு ஈரானில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்தப் பின்னணியில் ஈரானில் வியாழக்கிழமை (ஜன. 22) அன்று ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப் பெரிய ‘போர்க்கப்பல் படை’ சென்று கொண்டிருப்பதாக டிரம்ப் தெரிவித்தார். ஈரானில் போராட்டக்காரர்களைக் கொல்லக்கூடாது மற்றும் அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கக்கூடாது என்று மீண்டும் மிரட்டல் விடுத்தார். மேலும் ராணுவத்தை பயன்படுத்த வேண்டிய சூழல் வராது என்று நான் நம்புகிறேன் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் பெயர் குறிப்பி டப்படாத ஈரானின் உயர்நிலை அதிகாரி ஒருவர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள் ளார். அமெரிக்காவின் இந்த ராணுவ நகர்வானது ஒரு நேரடி மோதலுக்கானது அல்ல என்று நாங்கள் நம்புகிறோம். இருப்பினும், எந்தவொரு மோசமான சூழ்நிலையையும் எதிர்கொள்ள எங்கள் ராணுவம் தயாராக உள்ளது. இதன் காரணமாகவே ஈரான் முழுவதும் மிக அதிகமான எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் அந்நாட்டு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த முறை தாக்குதல் சிறிய அளவி லானதாக இருந்தாலோ, குறிப்பிட்ட காலத்திற்கு நீடிப்பதாக இருந்தாலோ அல்லது எத்தகைய ராணுவத் தாக்குத லாக இருந்தாலும் அது முழுமையான போராகவே கருதப்படும். ஈரானின் இறை யாண்மையையும், எல்லைப் பாதுகாப் பையும் அமெரிக்கா மீறினால், நாங்கள் நிச்சயம் பதிலடி கொடுப்போம். அமெ ரிக்கா போன்ற நாடுகளின் அச்சுறுத்த லில் இருக்கும் ஒரு நாடு, தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் சமநிலை யைப் பேணவும் எல்லா வழிகளையும் கையாளுவதைத் தவிர வேறு வழி யில்லை என்றும் அவர் எச்சரித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசித் தாக்கியது. இந்த தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன் இதே போல அமெரிக்கா தனது ராணுவத்தை மத்திய கிழக்கு நாடுகளின் கடற்கரையில் நிலை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
