world

தீக்கதிர் உலக செய்திகள்

இலங்கையின் கடன்களை    நிறுத்தி வைக்க கோரிக்கை

இந்தியாவின் ஜெயதி கோஷ், உத்சா பட்நாயக், தாமஸ் பிகெட்டி உட்பட 120-க்கும் மேற்பட்ட பொருளாதார நிபுணர்கள்  இலங்கை செலுத்த வேண்டிய சர்வதேசக் கடன்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளனர். சர்வதேச நாணய நிதியம், லாபத்தை விட மக்களின் நலவாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்,நிதி நிர்வாகத்தை விட மனித நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தாய்லாந்து -கம்போடியா  போர் நிறுத்த ஒப்பந்தம் 

தாய்லாந்து-கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்குச் சம்மதம் தெரி வித்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் சனிக்கிழமையன்று பேச்சு வார்த்தைக்குப் பிறகு வெளியிடப்பட்ட இரு நாடு களின் அறிக்கையில் இது தெரிவிக்கப் பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி டிசம்பர் 27 அன்று நண்பகல் 12 மணி முதல் உடனடி போர்நிறுத்தம் அமலானது. இந்த போர்நிறுத்தம் அனைத்துப் பகுதிகளுக்கும் பொருந்தும் என அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடும் குளிர்   பட்டினியில் தவிக்கும் மக்கள் 

ஆப்கானிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேலான 2.3 கோடி பேர் உயிர்வாழ மனிதாபிமான உதவி களையே நம்பியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் கடும் குளிர்காலத்தில் முன்னெப்போ தும் இல்லாத வகையில் பசியாலும், வறுமையா லும் வாடி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள் ளது. ஐ.நா அவையின் உலக உணவுத் திட்டம் (WFP) மூலம் வழங்கப்பட்டு வந்த உணவு விநி யோகத்திற்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை நிறுத்தியது மக்கள் எதிர்கொள்ளும் வறுமைக்கு  முக்கியக்  காரணமாக உள்ளது.  

தேர்தலில் போட்டியிட்டால்  ஜெலன்ஸ்கிக்கு தோல்வி 

உக்ரைன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் ஜெலன்ஸ்கி தோல்வி யடைவார் என சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் வெளியாகியுள்ளது.  ‘சோசிஸ்’ என்ற அமை ப்பின்  கருத்துக் கணிப்பின்படி, இங்கிலாந்துக் கான உக்ரைன் தூதராக  தற்போது பணியாற்றி  வரும் அந்நாட்டின்  முன்னாள் தலைமைத் தளபதி வலேரி சலுஸ்னிக்கு   சுமார் 64 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஐந்தில் ஒரு பங்கு வாக்காளர்கள் எந்தச் சூழலிலும் ஜெலன்ஸ்கிக்கு வாக்களிக்க மாட்டோம் என்று உறுதியாகக் கூறியுள்ளனர்.

உலகின் மிக நீள சுரங்கப்பாதை : உள்கட்டமைப்புகளில் சீனா சாதனை 

உலகின் மிகநீளமான சுரங்கப்பாதை சீனாவில் வெள்ளிக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பகுதியில் உள்ள தியான்ஷான் மலைகள் வழியாகச் செல்லும் இப்பாதை சுமார் 22.13 கிமீ நீளம் கொண்டது. இச்சுரங்கப்பாதை பயண நேரத்தை மூன்று மணி நேரத்தில் இருந்து 20 நிமிடங்களாக குறைக்கும். சீனா மக்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.