நாடுகளின் இறையாண்மையை மீறும் அமெரிக்காவின் கொடூர முகம் மீண்டும் அம்பலமாகியுள்ளது வடகொரியா கடும் கண்டனம்
பியோங்யாங்,ஜன.5- வெனிசுலா மீது அமெரிக்கா நடத்தியுள்ள தாக்குதலானது மீண்டும் ஒருமுறை அந்நாட்டின் கொடூரமான முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது என வடகொரிய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வடகொரிய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பா ளர் கே.சி.என்.ஏ (KCNA) செய்தி நிறு வனத்திற்கு அளித்த பேட்டியில் இக்கண்டனத்தை பதிவு செய்துள் ்ளார். அவர் கூறியுள்ளதாவது: அமெ ரிக்காவின் தன்னிச்சையான மற்றும் அதிகாரப்பூர்வமான நடவடிக்கை யால் வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலை நாங்கள் உன் னிப்பாகக் கவனித்து வருகிறோம். ஏற்கனவே பலவீனமாக உள்ள அந்தப் பிராந்தியத்தின் நிலைத்தன்மையை அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மேலும் சீர்குலைக்கும். சர்வதேச சமூகம் நீண்டகாலமாகப் பார்த்து வரும் அமெரிக்காவின் மிக மோசமான, கொடூர குணத்தை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு நாட்டின் இறையாண்மையில் தலையிடக் கூடாது, எல்லைப் பாதுகாப்பை மதிக்க வேண்டும் என்ற ஐ.நா அவை சாசன சர்வதேசச் சட்டங்களை அமெரிக்கா அப்பட்டமாக மீறியுள்ளது. வெனி சுலாவில் அமெரிக்கா மேற் கொண்டுள்ள இந்த ஆதிக்க நடவ டிக்கையை வடகொரிய வெளியுற வுத்துறை அமைச்சகம் வன்மையாகக் கண்டிக்கிறது. மற்ற நாடுகளின் இறையாண் மையை மீறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ள அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சர்வதேசச் சமூகம் குரல் கொடுக்க வேண்டும். பிராந்திய மற்றும் சர்வதேச உறவுகளில் பேரழிவை ஏற்படுத்தி யுள்ள வெனிசுலாவின் தற்போதைய நிலையை உணர்ந்து, இதற்கு கண்ட னங்களைப் பதிவு செய்ய வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் வடகொ ரியா அழைப்பு விடுத்துள்ளது.
