தங்குமிடம் இல்லாமல் தவிக்கும் 10 லட்சம் பாலஸ்தீனர்கள்
காசாவில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும் இஸ்ரேல் தொடர்ந்து குண்டு வீசி படுகொலைகள் செய்து வருகிறது. பாலஸ்தீனர்களின் தங்குமிடங்களையும் அவர்களின் சுகாதார நிலையங்களையும் அழித்து விட்டது. தற்போது குளிர்காலம் நிலவி வரும் சூழலில் சுமார் 10 லட்சம் பாலஸ்தீனர்கள் தங்குவதற்கு பாதுகாப்பான இடங்கள் இல்லாமல் குளிர், புயல், மழையில் தவிப்பதாக ஐ.நா அவை கவலை தெரிவித்துள்ளது.
உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சர் மாற்றம்
உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தில் பெரிய மாற்றங்களை அந்நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். பாதுகாப்புத் துறை அமைச்சராக உள்ள டெனிஸ் ஷ்மிஹாலை மாற்றி விட்டு புதிய அமைச்சராக, அந்நாட்டின் துணைப் பிரதமர் மிகைலோ பெடோ ரோவா நியமிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த நான்கு ஆண்டு போரில் உக்ரைனின் பல துறைகளில் ஊழல் நிறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வேலையின்மை : சவூதிக்கு அனுப்பப்படும் வங்கதேச தொழிலாளர்கள்
வேலையின்மையின் காரணமாக 2025 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 7.5 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களை வங்கதேசம் சவூதி அரேபியாவிற்கு அனுப்பியுள்ளது. ஒரே ஆண்டில் ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு இவ்வளவு அதிகமான தொழிலாளர்களை அனுப்பியது இதுவே முதல்முறை என்று வங்கதேச தொழிலாளர் நல வாரியம் தெரிவித்துள்ளது. தற்போது சவூதி அரேபியாவில் சுமார் 35 லட்சம் வங்கதேசத்தினர் வசித்து வருகின்றனர். அந்த நாட்டில் உள்ள வெளிநாட்டினரில் வங்கதேசத்தினரே அதிகளவில் உள்ளனர்.
இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரிப்பு
பிரிட்டனில் பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்யும் இஸ்லாமியர்கள், குறிப்பாகப் பெண்கள் மற்றும் பள்ளிச் சிறுவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இதனால் பல இஸ்லாமியர்கள் பொது வெளியில் பயணம் செய்வதை குறைத்துக் கொண்டுள்ள சில புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தரவுகளின்படி 2019-2020 ஆம் ஆண்டில் பதிவான 2,827 இஸ்லாமியர்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் 2024-2025 ஆம் ஆண்டில் 3,258 ஆக அதிகரித்துள்ளது.
காம்பியா படகு விபத்து : தொடரும் மீட்புப் பணிகள்
மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு 200-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு புத்தாண்டு தினத்தன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அடாமா பாரோ அறிவித்துள்ளார். இதுவரை 102 பேர் உயிருடனும் 7 பேர் சடலங்களாகவும் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2025 ஆகஸ்ட் மாதம் இதே போன்ற விபத்தில் 150 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் மிரட்டலுக்கு ஈரான் கடும் கண்டனம்
டெஹ்ரான்,ஜன.3- ஈரானின் உள்நாட்டு விவகாரங்க ளில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், ஈரான் மீது ஏதேனும் தாக்கு தல் நடத்தப்பட்டால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் அரசு எச்சரித்துள்ளது. அத்துடன் டிரம்பின் இந்தத் தொடர்ச்சியான போர் மிரட்டல்க ளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கு மாறு ஐ.நா அவைக்கும் ஈரான் புகார் செய்துள்ளது. ஐ.நா பொதுச்செய லாளர் அந்தோணியோ குட்டரெஸ் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பி னர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் டிரம்ப்பின் கருத்துக்கள் ஒரு சுதந்திர நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் செயலாகும். இது ஐநா சாசனத்தின் சட்ட விதிகளை வெளிப்படையாக மீறும் செயல். அமெரிக்காவின் இத்தகைய பேச்சுக்கள் ஈரானுக்குள் வன்முறை, குழப்பம் மற்றும் பயங்கரவாதச் செயல்களைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளன என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஈரானில் ஏற்பட்டுள்ள பொரு ளாதார நெருக்கடி காரண மாக அந்நாட்டில் போராட்டம் வெடித் துள்ளது. இந்த சூழலை பயன் படுத்திக்கொண்ட அமெரிக்கா அந்நாட்டின் மீது தாக்குதல் தொடுப் போம் என மிரட்டல் விடுத்தது. இஸ்ரேலின் மொசாத் உளவுத் துறையானது நாங்கள் வார்த்தைக ளில் மட்டுமல்ல களத்திலும் ஈரானில் உள்ளோம் என ஈரானுக்குள் அழிவு வேலைகளில் ஈடுபடுவோம் என பகி ரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது. இந்நிலையில் ஈரான் வெளியுற வுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் அந்நாட்டு அதிகாரிகளின் கருத்துக்களை “பொ றுப்பற்றது மற்றும் சட்டவிரோ தமானது” என்று கடுமையாக எதிர் வினையாற்றியுள்ளது. அமெரிக்காவின் இத்தகைய மிரட்டல்கள் ஐ.நா அவையின் அடிப் படை விதிகளையும், ஒரு நாட்டின் இறையாண்மையையும் மீறும் செயல். அது ஈரானின் குடிமக்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் செயல். அமெரிக்கா காட்டும் அக்கறை கபட நாடகம் என்று ஈரான் கண்டித்துள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்கா கடந்த காலத்தில் ஈரான் மீது நடத்திய அத்துமீறிய தாக்குதல்க ளையும் பட்டியலிட்டது. அதாவது 1953-ஆம் ஆண்டு ஈரானின் பிரதமர் முகமது மொசாடெக் ஆட்சிக்கு எதிராக ஆட்சிக்கவிழ்ப்பு சதியை அமெரிக்கா செய்தது. 1988-இல் 300 பேர் பயணம் செய்த ஈரான் பயணி கள் விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. அந்நாட்டு ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் காசிம் சுலைமானியை படுகொலை செய்தது. ஈரான் மக்களின் வாழ்வாதா ரத்தைப் பாதிக்கும் வகையில் பல ஆண்டுகளாக பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது என ஈரான் தெரிவித்துள்ளது. மேலும் தனது உள்நாட்டுப் பிரச்ச னைகளைத் தீர்த்துக் கொள்ளும் திறன் கொண்ட நாடு தான் ஈரான். இதில் வெளிநாடுகளின் தலை யீட்டை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அமெரிக்காவின் நடவடிக்கைகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகப் படுத்தும். இதனால் ஏற்படும் விளைவு களுக்கு அமெரிக்காவே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
