வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 1,020 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டு நிலவுகிறது. இது மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், நாளை மாலை முதல் இரவு நேரத்திற்குள் இலங்கையின் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இலங்கையின் சில பகுதிகளிலும், தென் தமிழக கடலோரப் பகுதிகளிலும் கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
