கலவர தீபமாகக் கூடாது!
தமிழக ஆலயங்களில் அனைத்துச் சாதியின ரும் அர்ச்சகராகலாம் என சட்டம் கொண்டு வந்தபோது நீதிமன்றம் ஆகமக் கோவில்களில் அனுமதிக்க முடியாது என்று தீர்ப்புக் கூறி அந்தச் சட்டத்தை செல்லாததாக்கியது. ஆனால் அதே ஆகமத்தைப் பின்பற்றும் திருப்ப ரங்குன்றம் கோவிலில், கோபுரத்துக்கு நேர் மேலே உச்சிப் பிள்ளையார் கோவிலில் கார்த்தி கை தீபம் ஆகமப்படியே, கோவில் நிர்வாகத்தால் ஏற்றப்படுகிறது. ஆனால் நீதிமன்றம் வேறு இடத்தில் தீபம் ஏற்றச் சொன்னது. அப்போது ஆகமம் எங்கே போனது?
ஆனால் ஆகம முறைப்படி வழக்கமான இடத்திலேயே கோவில் நிர்வாகம் தீபம் ஏற்றி யது. இது தொடர்பாக இரு நீதிபதிகள் முன்பு விசாரணை நடைபெற்ற வழக்கில் செவ் வாயன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், தேவஸ்தா னம் மலை உச்சியில் உள்ள கல்தூண் எனக் கூறப்படும் தீபத் தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் இதற்கு தொல்லியல் துறையிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அத்துடன் இதை மதுரை மாவட்ட ஆட்சியர் பார்வையிட வேண்டும். ஆனால் தனி நபர்கள் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது. தேவஸ்தானம் மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் தான் ஏற்ற வேண்டும். வேறு யாரும் அங்கு செல்லக் கூடாது என்றும் ஒவ்வொரு கார்த்திகையிலும் தீபம் ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
தேவஸ்தானம் ஏற்கெனவே மரபுப்படியும் ஆகமப்படியும் ஓரிடத்தில் ஏற்றிக் கொண்டி ருக்கும் போது அதை ஏன் மாற்ற வேண்டும், அதுவும் தர்கா அருகில் உள்ள வேறிடத்தில். இந்த தீர்ப்புக்காக, வழக்குத் தொடுத்தவர் எல்லாப் புகழும் முருகனுக்கே என்று கூறுகிறார். இது எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று கூறுகிற இஸ்லாமிய முழக்கத்தை கேலி செய்யும் பேச்சன்றி வேறென்ன? ஆனால் அவரோ, மக்களிடம் வெறுப்புணர்வை இந்த அரசு சம்பாதித்திருக்கிறது என்று கூறுகிறார். உண்மையில் வெறுப்புணர்வை விதைப்பவர்கள் இவரும் இவரது கூட்டத்தினரும்தான்.
ஒன்றிய அமைச்சர் எல்.முருகனும் கூட இந்த வெற்றி முருகனுக்கே என்று கூறியி ருக்கிறார். ஆனால் இந்த தீர்ப்பு இவர்களது செல்வாக்கு வட்டத்தில் இருக்கும் முருகனால் (சுவாமிநாதனால்) துவக்கி வைக்கப்பட்டது. அதனால் தான் எதற்காக இப்படி ஒரு தீர்ப்பைக் கொடுத்து தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று மாநில சட்ட அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறை யீடு செய்யப்படும் என்று அவர் கூறியிருப்பது முற்றிலும் சரியே!
இப்படி ஒரு தீர்ப்பால்தான் மணிப்பூர் மாநிலம் 2 ஆண்டுகளுக்கு மேலாகப் பற்றி எரிந்து கொண் டிருக்கிறது. அதை உணர்ந்து பாஜகவின் பாதக விளையாட்டை முறியடிக்கும் தமிழக அரசின் முடிவும் முயற்சியும் வெற்றி பெறட்டும்!
