tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

வருசநாடு அருகே குடும்பத் தகராறில் 2 மகன்களுடன் பெண் தற்கொலை

வருசநாடு, ஜன.6- தேனி மாவட்டம், வருசநாடு அருகே தண்டியகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபெருமாள் (40). இவருக்கு  தனலட்சுமி என்ற மனைவியும் தேவா, நீதி என்ற 2 மகன்  களும் உள்ளனர். கூலி வேலை செய்யும் ஜெயபெரு மாள் தினந்தோறும் மது குடித்து விட்டு மனைவி தனலட்சுமி யுடன் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.  குடியை நிறுத்தும் படி மனைவி தனலட்சுமி பலமுறை வலியுறுத்தியும் அதனை பொருட்படுத்தவில்லை. இந்த  நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான தனலட்சுமி, தனது  2 மகன்களையும் தூக்கிக் கொண்டு தண்டியன்குளம் ஓடைப்பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் குதித்து  தற்கொலை செய்து கொண்டார். அதிகாலையில் கிணற்றில் தனலட்சுமி மற்றும் மூத்த  மகன் தேவா ஆகியோர் தண்ணீரில் பிணமாக மிதப்பதை  கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீசார், தீய ணைப்புத் துறையினர் உதவியுடன் கிணற்றில் மிதந்த தன லட்சுமி மற்றும் சிறுவன் தேவா ஆகியோரின் உடலை மீட்ட னர். மேலும் கிணற்றுக்குள் 2 வயது சிறுவன் நீதியின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

காரியாபட்டி அருகே  ஒருவர் படுகொலை: 4 பேர் சரண்

காரியாபட்டி, ஜன.6- விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூ ரில் கட்டிடத் தெழிலாளி வெட்டிக் கொல்லப்பட்டார். இது  தொடர்பாக 4 பேர் சரணடைந்தனர். ஆவியூரைச் சேர்ந்தவர் ராமசாமி (33). இவர் கொத்த னாராக கூலி வேலை செய்து வந்தார். இவரது அண்ணன்  வெங்கடேசன். இவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அவரது இறப்பிற்கு ராமசாமி குடும்பம் தான் காரணம் என வெங்கடேசன் குடும்பத்தார் பிரச்சனை செய்து வந்தார்களாம். மேலும்  இருவரின் வீடும் அருகருகே இருப்பதால் இடப் பிரச்சனை  இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆவியூர் பேருந்து நிறுத்தம் அருகே  ராமசாமி சென்றுள்ளார். அப்போது அவரது அண்ணன் மகனான பிரவீன் (20), அவரது நண்பர்களான ராயர்பட்டி யைச் சேர்ந்த செல்லப்பாண்டி (19), ஆவியூரைச் சேர்ந்த  இரு சிறுவர்கள் என 4 பேர் சேர்ந்து ராமசாமியை வெட்டிக்  கொலை செய்தார்களாம். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராமசாமியின் உடலை மீட்டு விருதுநகர் அரசு  மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ராமசாமியை கொலை செய்த 4 பேரும்  ஆவியூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

திருவில்லிபுத்தூரில் மடிக்கணினி வழங்கும் விழா

திருவில்லிபுத்தூர், ஜன.6- தமிழக அரசின் சார்பில், தமிழகம் முழுவதும் கல்லூரி களில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக மடிக் கணினி வழங்கும் திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டம்  திருவில்லிபுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி  மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடை பெற்றது. இந்த விழா கல்லூரி முதல்வர் சரவணன் தலைமையில்  நடைபெற்றது. விழாவில் உதவி ஆட்சியர் முகமது இர்பான்  கலந்து கொண்டு, மாணவ–மாணவியர்களுக்கு மடிக் கணினிகளை வழங்கினார். விழாவிற்கு கணிதவியல் துறைத் தலைவர் அமுதா  அனைவரையும் வரவேற்றார். வணிகவியல் துறைத் தலை வர் சரவணகைலாஷ், திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் பாலமுருகன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வின் முடிவில், கணினி அறிவியல் துறைத் தலை வர் ரவி நன்றி கூறினார்.

வேலை வாங்கி தருவதாக ரூ.74லட்சம் மோசடி செய்தித்துறை அதிகாரி மீது வழக்கு

தேனி, ஜன.6- அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.74லட்சம் மோசடி  செய்ததாக செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர் சண்முக சுந்தரம், அவர் மனைவி மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியகுளம் தாமரைக்குளம் மகாத்மா காந்தி தெரு வைச் சேர்ந்த முனீஸ்வரன் மனைவி சாந்தி (48). இவரது  மகன் சூரியநாராயணன் அரசு வேலைக்கு முயற்சித்து கொண்டிருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு தேனி ஆட்சி யர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக  பணிபுரிந்த சண்முகசுந்தரத்தை தொடர்பு கொண்டார். அப்போது தனக்கு அதிகாரிகள், அரசியல்வாதிகளை தெரியும். அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்று சண்முக சுந்தரம் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய சாந்தி ரூ.50 லட்சம் கொடுத்துள்ளார். இதே போல் செல்லத்தம்பி, பவித்ரா, பழனிக்குமார், முத்துப்பாண்டி உள்ளிட்டோரிடமும் இதுவரை மொத்தம்  ரூ.74 லட்சம் பெற்று வேலை வாங்கி தராமல் ஏமாற்றி யதாக சாந்தி தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலை யத்தில் புகார் செய்தார். இதனடிப்படையில் சண்முகசுந்த ரம், அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோர் மீது  வழக்குப்பதிவு செய்து குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மாயராஜலட்சுமி விசாரித்து வருகிறார்.

கொலை மிரட்டல்  விடுத்தவர் மீது வழக்கு

திருவில்லிபுத்தூர், ஜன.6- திருவில்லிபுத்தூர் உழவர் தெருவைச் சேர்ந்தவர் காளீஸ்வரி. இவருக்கும் ஆராய்ச்சி பட்டித்தெருவைச் சேர்ந்த மாரீஸ்வரன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்ட தில் இரு குடும்பத்தாரும் சேர்ந்து பேசியதன் அடிப்படை யில் காளீஸ்வரி அலைபேசி எண்ணை மாற்றிவிட்டார். இந்நிலையில் திங்களன்று காளீஸ்வரியின் வீட்டிற்கு  சென்ற மாரீஸ்வரன் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல்  வைத்துள்ளார். திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலை யத்தில் காளீஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தக்கலையில் நாளை  நலம் காக்கும் ஸ்டாலின்  முகாம்

நாகர்கோவில்,ஜன.6-                கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா ஜனவரி 6 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில்,  இம்முகாமில் சிறந்த மருத்துவர்களை வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக தங்களது முழு உடலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.  உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில்  மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, அட்டை பெற்ற நபர்களுக்கு, இம்முகாமில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் முகாமில் ஆண்கள், பெண்கள், கர்ப்பிணிகள் (மகப்பேறு) என மூன்றாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 8 அன்று பத்மநாபபுரம் நகராட்சி, இரணியல், விலவூர், திருவிதாங்கோடு ஆகிய பேரூராட்சி மற்றும்    முத்தலக்குறிச்சி, சடையமங்கலம், நுள்ளிவிளை, கல்குறிச்சி ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில்  தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்  நடைபெறவுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிக்கு அருகாமையில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் – முழு உடல் பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார். 

தமுஎகச கிளை அமைப்பு    

  திருநெல்வேலி ஜன 6- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க நெல்லை நகர கிளை அமைப்புக் கூட்டம்   ஈஸ்வரன் தலைமையில்நடபெற்றது.மாவட்ட பொருளாளர்  முத்துலட்சுமி பங்கேற்றுப் பேசினார். இதில் கிளைத் தலைவராக மா.ச.இளங்கோமணி, செயலாளராக வை.ராஜேஷ், துணைத் தலைவர்களாக ஜாஜிதா பாத்திமா , நாடக இயக்குனர்  நமச்சிவாயம்,துணைச்செயலாளர்களாக ஆனந்தி, ஈஷா  ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மார்த்தாண்டம் மேம்பாலத்தில்  கனிம லாரி மோதி இருவர் படுகாயம்  குழித்துறை, ஜன. 6- மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கனிம லாரி மோதி இருவர் படுகாயம் அடைந்தனர். காசர்கோடு பாலா பகுதியைச் சேர்ந்தவர் ஜேக்கப் குரியகோஸ் (21),  அதே பகுதியைச் சேர்ந்தவர் சச்சின் (22 ) .இருவரும் குழித்துறை பகுதியில்  தங்கி இருந்து மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலைக்கு சென்று வருகின்றனர்.  இந்நிலையில்  வேலைக்கு  ஜேக்கப் குரியகோஸ் பைக்கில் சென்றனர்.  பின்னால் சச்சின் அமர்ந்திருந்தார். மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சென்ற போது, அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் எதிரே வந்த கனிம் ஏற்றிவந்த லாரி , பைக் மீது மோதியது.  இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து கொடுத்த புகாரின் பேரில்  நிற்காமல் சென்ற கனிம லாரி மீது மார்த்தாண்டம் போலீசார்  

ஜன.9 தென்காசியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்  தென்காசி, ஜன. 6- தென்காசி மாவட்டத்தில் 26.12.2025 ஆம் தேதியன்று நடைபெற இருந்த 2025 டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது வருகின்ற ஜனவர் 9 வெள்ளியன்று காலை 11 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வைத்து நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்துத்துறை அலுவலர்களும் பங்கேற்கிறார்கள். எனவே, அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொள்வதோடு மனுவில் தங்களது கைபேசி எண்ணையும் குறிப்பிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விவசாய குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப் படும் மனுவிற்கான ஒப்புகையும் மனுவின் கோரிக்கை தொடர்பான விபரங்களும் அனைத்து வகை கைபேசிக ளிலும் பார்க்கும் வண்ணம் செயலி வாயிலாக குறுஞ்செய்தி யாக அனுப்பப்படும். இக்குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயம் தொடர்பான தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு தென்காசி மாவட்ட விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.