15 மணிநேர செய்தியாளர் சந்திப்பு நடத்திய மாலத்தீவு ஜனாதிபதி
மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு தொடர்ந்து 15 மணிநேரம் செய்தியாளர் சந்திப்பு நடத்தியுள்ளார். காலை 10 மணிக்கு துவங்கிய இந்த சந்திப்பு சுமார் 14 மணிநேரம் 54 நிமி டங்கள் நடந்துள்ளது. இதற்கு முன்பு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி 14 மணிநேரம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி யிருந்தார். இடையே பிரார்த்தனை களுக்காக சிறிய இடைவேளை விடப்பட்டது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் வெளிநாடுகளுடனான உறவுகள், ஒப்பந்தங்கள் குறித்து பேசியுள்ளார்.
பாகிஸ்தான் சென்ற ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர்
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் ஒருநாள் பயணமாக பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனை தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் அதன் நட்பு நாடு தலைவர்களுடன் தொடர் சந்திப்பு நடத்தி வருகிறது. பாகிஸ்தானும் இந்தியாவுடனான போர் பதற்றத்தை தொடர்ந்து அதன் நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் அவர் பாகிஸ்தான் வந்துள்ளார். மே 8 வியாழனன்று அவர் இந்தியா வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் திரைப்படம் எடுத்தால் 100 சதவீதம் வரி
அமெரிக்காவிற்கு வெளியே வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் திரைப்படங்கள் தேசிய பாதுகாப்பு மற்றும் பிரச்சார பாணியில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த முடிவு அமெரிக்க திரைப்படத் துறையை மீட்டெடுக்கும் நோக்கம் கொண்டது எனவும் அவர் கூறியுள்ளார். எனினும் இவ்வரி ஹாலிவுட் துறையை நெருக்கடிக்குள் தள்ளும் என கூறப்படுகிறது.
காசா குழந்தைகளின் மருத்துவ உதவிக்காக போப் வாகனம் மறுவடிவமைப்பு செய்யப்படுகிறது
வாடிகன், மே 5 - மறைந்த போப் பிரான்சிஸ்-இன் இறுதி ஆசைப்படி அவரது வாகனம் நடமாடும் மருத்துவமனையாக மறு வடிவமைப்பு செய்யப்பட்டு காசா வில் உள்ள குழந்தைகள், பெண்களின் உயிர்காக்கும் நடவடிக்கைக்காக அனுப்பப்பட உள்ளது. போப் பிரான்சிஸ் தனது காலத்தில் முதலாளித்துவத்திற்கு எதிராகவும், அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகள் வளரும் ஏழை நாடுகள் மீது கட்டவிழ்த்து விடும் போர்களுக்கு எதிராகவும் கடுமையான முறையில் விமர்சனம் செய்துள்ளார். காசா குழந்தைகளின் மீது நடத்தப்படும் கொடூரமான தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தனது மரணத்திற்கு முன் தினம் நடைபெற்ற ஈஸ்டர் தின உரையில் கூட பாலஸ்தீனம், ஏமன், சூடான் உள்ளிட்ட நாடுகளின் மீது நடைபெறும் போர்கள் முடிவுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் மரணத்திற்கு பின் தன்னுடைய வாகனத்தை காசாவில் உள்ள பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட பாலஸ்தீன மக்களை பாது காக்கவும் மருத்துவ சிகிச்சை கொடுக்கும் வகையிலும் அர்ப்பணிக்க வேண்டும் என தனது இறுதி ஆசையை தன் மரணத்திற்கு முன்பே தெரிவித் திருந்தார். இந்நிலையில் ஜெருசலேமில் உள்ள ஒரு நிறுவனம் மூலம் அவரது வாகனம் நடமாடும் மருத்துவமனை யாக மாற்றப்பட்டு வருகிறது. காசாவின் ஒட்டு மொத்த மருத்து வக் கட்டமைப்பையும் இஸ்ரேல் அழித்துவிட்டது. பாலஸ்தீனர்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படக் கூடிய மருந்துகள், குடிநீர், ஊட்டச் சத்தான உணவுகளை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் தடுத்து வரு கிறது. கடந்தவாரம் நிவாரணப்படகு ஒன்றின் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசி தனது இனப்படுகொலை வெறியை பகிரங்கப்படுத்தியது. காசாவில் தற்போது 10 லட்சத் திற்கும் அதிகமான குழந்தைகள் வீடு கள் இன்றி அடிப்படை பாதுகாப்பு சுதந்திரம் இன்றி துன்பத்தில் தள்ளப் பட்டுள்ளனர். இந்நிலையில் தான் போப்பின் ஆசைப்படி அம்மக்களுக்கான சிறிய நடமாடும் மருத்துவமனை ஒப்படைக் கப்பட உள்ளது. வேகமான முறையில் நோய் கண்டறியும் கருவிகள், தடுப்பூசி கள், தையல் போடுவதற்கான பொருட் கள், மருந்துகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் பய ணிக்கும் வகையில் இவ்வாகனம் உரு வாக்கப்பட உள்ளது என தெரிவிக்கப் பட்டுள்ளது. “இது ஏதோ வெறும் ஒரு வாகனம் மட்டுமல்ல, காசா குழந்தைகளை உலகம் மறக்கவில்லை என்பதற்கான செய்தி” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் பாகிஸ் தான் அரசு மீண்டும் ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது. கடந்த வாரம் தரையில் இருந்து 450 கி.மீட்டர் தூரம் சென்று தரைமீதுள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையை ஏவி சோதனை நடத்தியது. தற்போது மீண்டும் 120 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் திறன்படைத்த ஏவுகணையை ஏவி பாகிஸ்தான் சோதனை செய்துள்ளது.
இந்தியாவில் அதிகரிக்கும் ஐ-போன் உற்பத்தி
இந்தியாவில் ரூ.3,37,013 கோடி மதிப்புள்ள ஐ-போன்கள் 2026 இல் தயாரிக்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. சீனா மீதான வரியை அமெரிக்கா அதி கரித்துள்ள நிலையில் அங்கு உற்பத்தி செய்யப்படும் ஆப்பிள் நிறு வனத்தின் போன்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் 80 சதவீதமான வாடிக்கையாளர்களுக்கும் இந்தியாவில் உள்ள தங்கள் வாடிக்கையாளர்களுக்கும் இந்தியாவிலேயே போன்களை உற்பத்தி செய்ய வுள்ளது.