இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 2 பேர் பலி, 21 பேர் மாயம்
இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 12 வீடுகள் இடிந்து 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந் நாட்டு அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணி மற்றும் மீட்புப் பணி கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என அந்நாட்டு பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. 2025 ஜனவரியில் பெய்த கனமழை நிலச்சரிவுகளில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வீடுகளில் இருந்தவர்கள் அடித்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஈரான் திட்டத்துடன் தொடா்புடைய இந்திய நிறுவனங்களுக்கு தடை
ஈரான் நாட்டின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்துடன் தொடா்பு கொண்டுள்ளதாக 32 நிறுவனங்கள் மற்றும் தனிநபா்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஏவுகணைகள் உள் ளிட்ட ஆயுதத் தயா ரிப்பில் ஈரான் பலம் வாய்ந்த நாடாக மாறிவிடக்கூடாது என அமெரிக்கா அந் நாட்டுக்கு தொ டர்ந்து பல நெருக்க டிகளை கொடுத்து வருகிறது. அதன் படி தற்போது ஈரான், சீனா, ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மீது தடை விதித்துள்ளது.
வியட்நாம் - சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் பேச்சுவார்த்தை
வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டூ லாம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) அரசியல் குழு உறுப்பினர் லி ஷுலேயை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி யுள்ளார். இந்த சந்திப்பில் வியட் நாம்-சீனாவுக்கு இடையேயான வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஊடகம், கலாச்சா ரம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் ஒத்து ழைப்பை அதிகப்படுத்துவது குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய உச்சத்தில் உலக கார்பன் உமிழ்வு
2025 ஆம் ஆண்டில் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து வெளியேறும் உலகளாவிய கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு 38.1 பில்லியன் டன்களை தாண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இது புதிய மற்றும் ஆபத்தான அள வாகும். பிரேசில் நாட்டில் நடைபெ றும் 30 ஆவது ஐ.நா காலநிலை மாற்ற மாநாட்டில் சர்வதேச அறிவியல் கூட்டமைப்பான ‘குளோபல் கார்பன் ப்ராஜெக்ட்’ தயாரித்த ஆய்வுக் கட்டுரையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாலஸ்தீன அகதிகள் அமைப்பு
ஐ.நா அவையின் பாலஸ்தீன அகதிகளுக்கான நிவா ரணம் மற்றும் பணிகள் நிறுவனம் மிக மோசமான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. 2025 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டுக்கும், 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக் கும் இடையேயான நிதிப் பற்றாக்குறை சுமார் ஆயிரத்து 774 கோடி ரூபாய்க ளுக்கும் மேல் (200 மில்லியன்) இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த கடுமையான நிதிப் பற்றாக்குறை காரணமாக இவ்வமைப்பு பாலஸ்தீனர்களுக்கு நிவாரண உதவி செய்வது கேள்விக்குறியாகியுள்ளது.
