world

img

தீக்கதிர் உலக செய்திகள்

பாலஸ்தீன நிலங்களை ஆக்கிரமிக்க இஸ்ரேல் அமைச்சரவை ஓப்புதல் 

மேற்குக் கரையின் பெரும் பகுதிகளை ஆக்கிரமிப்பதற்கான திட்டத்திற்கு இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பாலஸ்தீனர்கள் வசிக்கும் நிலம் அவர்களுக்குரியது என ஆதாரம் சமர்ப்பிக்கவில்லை என்றால் அந்த இடத்தில் இருந்து அவர்களை வெளியேற்றும் வகையில் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட முன்மொழிவு அமலாகியுள்ளது. பாலஸ்தீனர்கள் தங்கள் நில உரிமையை நிரூபிப்பதற்கான நிபந்தனைகள் கடினமாக்கப்பட்டுள்ள நிலையில் இது  ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களை மீண்டும் சொந்த நிலத்தில் இருந்து வெளியேற்ற வழி வகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லெபனான் எல்லையில்  இஸ்ரேல் குண்டு வீச்சு 

லெபனான்-சிரிய எல்லையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது இஸ்ரேல் ராணுவம் டிரோன் குண்டு வீசி நான்கு பேரை படுகொலை செய்துள்ளது. பாலஸ்தீனத்தில் செயல் படும் இஸ்லாமிய ஜிஹாத் என்ற ஆயுத குழுவை சேர்ந்தவர்கள் அந்த காரில் பயணித்ததாகவும் எனவே இந்தத் தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது. லெபனான் மற்றும் பாலஸ்தீனத்தில்  போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டாலும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. எனினும் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்பினரை அல்லது இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பினரை தாக்குவது இதுவே முதல் முறையாகும்.

ஈரான் மீது தாக்குதல் நடத்த  இஸ்ரேலுக்கு டிரம்ப் ஆதரவு

ஈரான் அணுசக்தி திட்டம் தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ஜெனிவாவில் நடை பெற உள்ளது. இந்த சூழலில் அமெரிக்கா  மற்றும் ஈரான் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தை கள் தோல்வியடைந்தால், ஈரானின்  மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களைத் தான் ஆதரிப்பேன் என டிரம்ப் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2025 டிசம்பர் மாதம் புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லாகோ (Mar-a-Lago) இல்லத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவைச் சந்தித்த போதே டிரம்ப் இந்தத் தகவலைத் தெரிவித்ததா கவும் கூறப்பட்டுள்ளது. 

தொழிலாளர் விரோத சட்டங்கள்   அர்ஜெண்டினாவில் பொது வேலைநிறுத்தம் 

தொழிலாளர் நலன்களை காவு கொடுக் கும் புதிய தொழிலாளர் சட்டங்க ளுக்கு அர்ஜெண்டினா நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அந்நாட்டின்   கீழ்சபையிலும்  இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் பெற ஜனாதிபதி மிலெய் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். இதனை எதிர்த்து நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்தம் செய்ய தொழிற்சங்கங்கள் தயாராகி வருகின்றன. மருத்துவ விடுப்புகளின் போது தொழிலாளர்களின் ஊதியத்தைக் குறைப் பது உள்ளிட்ட தொழிலாளர் விரோத நடவடிக்கை கள் புதிய சட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கனடா, பிரிட்டன் பயணிகளுக்கு  விசா இன்றி அனுமதி-சீனா

பிப்ரவரி 17 கனடா, பிரிட்டன் நாட்டுப் பயணிகளு க்கு  விசா இல்லா நுழைவு அனுமதியை சீனா   வழங்கியுள்ளது. இதன் மூலம் கனடா மற்றும் பிரிட்டன் நாடுகளின் சாதாரண பாஸ்போர்ட் வைத்தி ருப்பவர்கள் வணிகம், சுற்றுலா, குடும்பம், நண்பர்க ளைச் சந்திப்பது போன்ற நோக்கங்களுக்காக விசா இன்றி சீனா சென்று  30 நாட்கள் வரை அங்கு தங்கலாம். இந்தச் சலுகை 2026 டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்பு இரு நாட்டு மக்கள் தொடர்பை வலுப்படுத்தும் என கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் வரவேற்றுள்ளார்.