உணவுக்காக காத்திருந்தவர்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேல்
இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஒரே நாளில் 83 பாலஸ்தீனர்கள் படு கொலையாகியுள்ளனர். காசா சிவில் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி காசாவின் பல்வேறு பகுதிகளில் நடத்த தாக்குதலில் இவர்கள் கொல்லப் பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது. இதில் சுமார் 58 பேர் உணவுக்காக உணவு விநியோக நிலையங்களுக்கு அருகே காத்துக் கிடந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் உருவாக்கிய நிதி நெருக்கடி: பல்கலை. ஊழியர்கள் வேலையிழப்பு
பல்கலைக்கழகத்திற்கான நிதியை வெட்டி, டிரம்ப் உருவாக்கிய நிதி நெருக்கடியின் காரண மாக ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் 360 க்கும் மேற்பட்ட ஊழி யர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது. இஸ்ரே லின் இனப்படுகொலை க்கு எதிராகவும், கால நிலை பாதிப்பு, பால் புது மையினர் குறித்தான சமத்துவமான கொள்கை கள் உள்ளிட்டவற்றை முன்வைத்து மாணவர்கள் பெரும் போராட்டம் நடத்திய நிலையில் பல்கலைக் கழகங்களுக்கான நிதிகளை டிரம்ப் வெட்டியது குறிப்பிடத்தக்கது.