tamilnadu

img

16-ஆவது மாநில மாநாடு எழுச்சிப் பேரணியுடன் நிறைவு சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன நிர்வாகிகள் தேர்வு

16-ஆவது மாநில மாநாடு எழுச்சிப் பேரணியுடன் நிறைவு சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் 
சம்மேளன நிர்வாகிகள் தேர்வு

தருமபுரி, ஆக. 7 – அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளன (சிஐடியு) புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) 16-ஆவது  மாநில மாநாடு தருமபுரியில் தோழர்கள் என். குட்டப்பன், எஸ். பக்தவத்சலு நினை வரங்கத்தில் (டிஎன்சி விஜய் ஹாலில்) ஆகஸ்ட் 5-ஆம் தேதி துவங்கியது. மாநாட்டிற்கு, சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் தலைமை வகித்தார். ஆகஸ்ட் 6 அன்று பிரதிநிதி கள் விவாதம் நடைபெற்றது. மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் எஸ். ராஜேந்திரன், தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் வி. குப்பு சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர். நிறைவாக, வியாழனன்று (ஆக.7) புதிய நிர்வாகிகள் தேர்வுநடைபெற்றது. புதிய நிர்வாகிகள் இதில், அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத் தலைவராக அ. சவுந்தரராசன், பொதுச்செயலாளராக கே. ஆறுமுக நயினார், பொருளாள ராக வி. சசிகுமார் ஆகியோர் தேர்ந் தெடுக்கப்பட்டனர். துணைப் பொதுச்செயலாளராக வி.தயானந்தம், டி. ஜான்சன் கென்னடி, எம். கனகராஜ், எம். வெள்ளத்துரை ஆகியோரும், துணைத்தலைவர் களாக ஏ.பி.அன்பழகன், வீ. பிச்சை, எஸ். சண்முகம், எம். கண்ணன், ஜி. மணிமாறன், எஸ். தெய்வீரபாண்டியன், பி. செல்லத்துரை, ஆர். துரை,  என். ராமநாதன், ஆர். கிருஷண மூர்த்தி, எஸ். வேலு, ஜே. மாணிக்கம் ஆகியோரும், இணைச்செயலாளர் களாக ஆர். மணிமாறன், எஸ். வைத்திய நாதன், எஸ். முரளி, எஸ். ஜோதி, எம். வேளாங்கண்ணி ராஜ், பி.எம். அழகர்சாமி, சி. சுரேஷ், பி. சீனிவாசன் ஏ.ஆர். பாலாஜி, பி. முருகன், கே.இளங்கோ, கே. அன்பழகன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  பன்முக மேம்பாட்டுக் குழுவிற்கு என். முருகையா, பி. அதிவீர ராம பாண்டியன், எஸ். நடராஜன் உள்ளிட்ட சம்மேளன நிர்வாகக் குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  வியாழக்கிழமையன்று மாநாட்டை நிறைவு செய்து சம்மேளனத் தலைவர் அ. சவுந்தரராசன் உரையாற்றினார். தருமபுரி மண்டல தலைவர் எஸ். சண்முகம் நன்றி கூறினார்.