வெனிசுலா ராணுவத்தின் தலைவராக இடைக்கால ஜனாதிபதி டெல்சி
வெனிசுலா இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை தங்களது தலைமைத் தளபதியாக அந்நாட்டு ராணுவம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. அந்நாட்டின் உயர் மட்ட ராணுவத் தளபதி களின் பங்கேற்புடன் நடைபெற்ற ராணுவ விழாவின் போது இந்த உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது. அவ்வுறுதிமொழியில் தற்காலிக ஜனாதிபதி பாதுகாப்புப் படைகள் தங்களின் முழு ஆதரவை வழங்குகின்றன. நாட்டின் அமைதிக்கு ‘தேசிய ஒற்றுமை’ ஒன்றே ஒரே உத்தர வாதம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
