world

img

உலகளவில் வலிமையான விமானப்படை பட்டியலில் இந்தியா 3ஆவது இடம்!

உலகளவில் வலிமையான விமானப்படை பட்டியலில் இந்தியா 3ஆவது இடத்தை பிடித்துள்ளது.  

உலகளவில் வலிமையான விமானப்படையைக் கொண்டுள்ள நாடுகள் பட்டியலை வேர்ல்டு டிரெக்டரி ஆப் மாடர்ன் மிலிடரி ஏர்கிராப்ட் (டபிள்யூடிஎம்எம்ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா 242.9 புள்ளிகளை பெற்று முதலிடத்தையும் ரஷ்யா 114.2 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தையும், இந்தியா 69.4 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.  

98 நாடுகளின் 124 விமானப்படை சேவைகள் மற்றும் 47,140 போர் விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.  

இந்திய விமானப்படை 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி நிறுவப்பட்டது. இந்திய விமானப்படை 1950 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானுடன் 4 முறை போரில் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளது.

நிலநடுக்கம், சுனாமி, புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின்போது மீட்புப் பணியிலும் விமானப்படை ஈடுபடுகிறது. இந்தியாவில் 1,645 போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. விமானப்படையில் 1,70,576 பேர் பணிபுரிகின்றனர் குறிப்பிடத்தக்கது.